BREAKING NEWS:-
Search

சென்னையில் தி இந்து செய்தித்தாள் வெளிவரவில்லை

இந்தியாவின் பழமை செய்தித்தாள்களில் ஒன்றான சென்னை செய்தித்தாள் (பழைய பெயர்) வெள்ளப்பெருக்கு காரணமாக 137 ஆண்டுகளில் முதல் முறையாக அச்சிடப்படவில்லை. தற்போது இந்த செய்தித்தாள் தி இந்து என்ற பெயரில் வெளிவருகிறது.

ஆனால் புதனன்று சென்னையில் இந்த செய்தித்தாள் மழையின் காரணமாக அச்சிட்டு வெளிவரவேயில்லை. இந்த செய்தித்தாள் கடந்த 1878-ம் ஆண்டிலிருந்து வெளியாகிறது. ஆனால் சென்னையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் புதனன்று தி இந்து செய்தித்தாள் வெளிவரவில்லை என்று அதனுடைய காகித பதிப்பாளர் ந. முரளி செய்தியாளர்களிடம் கூறினார்.

தி இந்து பத்திரிகை வரலாற்றிலேயே முதல் முறையாக தற்போது தான் இந்த செய்தித்தாள் வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை தவிர மற்ற 17 நகரங்களிலும் செய்தித்தாள் வெளியிடப்பட்டது. ஏனென்றால் தி இந்து தலைமையிடத்தில் (மறைமலை நகரில்) சுமார் 30km-க்கு தண்ணீர் சூழ்ந்து உள்ளது. இதனால் ஊழியர்கள் பணிக்கு வரமுடியவில்லை என்ற திரு.முரளி கூறினார்.

http://www.bbc.com/news/world-asia-india-34981328

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *