BREAKING NEWS:-
Search

சூதாட்ட புக்கி பெயர் பட்டியலை கொடுங்கள்: ஐசிசி தலைவருக்கு அனுராக் தாகூர் கடிதம்

மும்பை: சூதாட்ட புக்கி என்று சந்தேகிகப்படும் கரண் கில்ஹோத்ராவுடன் இந்திய கிரிக்கெட் வாரிய செய லாளர் அனுராக் தாக்கூர் தொடர்பு வைத்திருப்பதாக தகவல் பரவியது. ஒரு நிகழ்ச்சியில் அனுராக் தாக்கூர் கேக் வெட்டி, கில்ஹோத்ராவுக்கு ஊட்டியதை படம் எடுத்து ஐசிசி-க்கு ஒருவர் அனுப்பியதாக கூறி, இதுதொடர்பாக பிசிசிஐ தலைவருக்கு ஐசிசி கடிதம் எழுதியது. அதில், சூதாட்ட தரகர்களிடம் இருந்து  அனுராக் தாக்கூர் விலகியிருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்தப் பிரச்னை தொடர்பாக ஐசிசி சேர்மன் சீனிவாசனுக்கு அனுராக் தாக்கூர் இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘‘சூதாட்ட புக்கி என்று கருதப்படுபவர்களின் பட்டியலை எங்களிடம் தாருங்கள். அவர்களிடம் இருந்து நாங்கள் விலகியிருக்கிறோம். எங்களிடம் தருவதற்கு முன்னர் அந்த பட்டியலை உங்களது குடும்பத்தில் உள்ளவர்களிடம் கொடுங்கள். அப்போது அவர்களும் சூதாட்ட புக்கிகளிடம் இருந்து விலகியிருப்பார்கள் ,’’ என்று கூறியுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *