BREAKING NEWS:-
Search

சீனாவில் தானியங்கி கனரக வாகன சோதனை ஓட்டம் வெற்றி..!

கூகுள், உபேர், டெஸ்லா என உலகின் பல முன்னணி நிறுவனங்கள், தானியங்கி வாகனங்களை உருவாக்குவதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதில் சீனாவும் விதிவிலக்கல்ல. அந்நாட்டில்  கனரக வாகன உற்பத்தியில் முன்னணி வகிக்கும் ’ஃபாவ் ஜிஃபேங்க்’ என்ற நிறுவனம், ஓட்டுநர் அல்லாத தானியங்கி கனரக வாகனங்களை உருவாக்கி வந்தது.

இந்நிலையில் சீனாவின் சாங்சுன் மாகாணத்தில் உள்ள தனது நிறுவனத்தின் ஆராய்ச்சி மையத்தில், தனது தானியங்கி கன ரக வாகனத்தை  ஜிஃபேங்க் நிறுவனம் சமீபத்தில் சோதித்தது.இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.இந்த வெற்றி மூலம், தனது தானியங்கி கனரக வாகனத்தை, அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு கொண்டு வர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த தானியங்கி கனரக வாகனம், பாதையில் இருக்கக்கூடிய தடைகள்,மேடு,பள்ளம் ஆகியவற்றை உணர்ந்து விபத்தில்லாமல் இயங்கக் கூடியது என ஜிஃபேங்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வாகனத்தில் பொறுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பம், போக்குவரத்து விளக்குகள் போன்றவற்றைக் கூட உணர்ந்து சாலை விதிகளை மீறாமல் செயல்படுமாம்.

தற்போது தங்கள் நிறுவனத்துடன் இணைந்து தானியங்கி கனரக வாகனங்களை உற்பத்தி செய்ய ,மற்ற நிறுவனங்களுக்கு ஜிஃபேங்க் அழைப்பு விடுத்துள்ளது. ஜிஃபேங்க் நிறுவனம் தவிர சீனாவின் முன்னணி தொழில் நிறுவனங்களான பைடு மற்றும் டான்செண்ட் ஆகிய நிறுவனங்களும் தானியங்கி வாகன உற்பத்தியில் ஆர்வம் காட்டி வருகின்றன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *