BREAKING NEWS:-
Search

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ள மைக்ரோசாப்ட்..!

உலகின் முன்னணி மின்னணு நிறுவனமான மைக்ரோசாப்ட், இந்தியாவில் உள்ள தொழில் நிறுவனங்கள் மீது சமீபகாலமாக தனது கவனத்தை திருப்பியுள்ளது. குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வர்த்தகம் தொடர்பான மென்பொருட்களை உருவாக்கித் தர அந்நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களுக்காக மைக்ரோசாப்டின் ‘ஸ்மார்டர் பிஸ்’ மற்றும் ’ஐடோஸ்’ ஆகிய இரண்டு புதிய மென்பொருளை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மென்பொருள் மூலம் வாடிக்கையாளர் தொடர்பு, நிதி மற்றும் கணக்குவழக்கு ஆகியவற்றை செய்ய முடியும்.

“தொழில்நுட்பங்களை கிரகிக்கும் போது இந்தியாவின் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரிய வளர்ச்சியை அடைய வாய்ப்புகள் வளருகின்றன. எனவே அவற்றை கவனத்தில் கொண்டு தொழில் நிறுவனங்களுக்காக புதிய மென்பொருட்களை உருவாக்கி வருகிறோம்.” என மைக்ரோசாப்ட்டின் இந்தியப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஸ்மார்ட் பிஸ் மென்பொருள் மூலமாக செல்பேசி மூலம் உற்பத்திப் பொருட்களை அளவிடுவது மட்டுமின்றி அவற்றின் வியாபாரத்தையும் கண்காணிக்கலாம். ஐடோஸ் மென்பொருள் மூலம் நிறுவனத்தின் அனைத்து கணக்குகளையும் மைக்ரோசாப்ட் 365-யில் தணிக்கை செய்ய முடியும். மேலும் இதன் மூலம் துல்லியமான கணக்கு வழக்குகளை பெற முடியும். இந்த இரண்டு மென்பொருள்களும் மிகக்குறைவான விலையில் கிடைக்கக்கூடிய, மைக்ரோசாப்ட் மேகக்கணினியகத்தில் செயல்படக்கூடியவையாகும்.

ஒரு நிறுவனத்தில் 50 மேற்பட்டவர்கள் ஆபிஸ் 365 மென்பொருளை பயன்படுத்துவதாக இருந்தால் ஒரு ஆபிஸ் 365 மென்பொருளை ஒரு மாதக்கட்டணமாக 250 ரூபாய்க்கு அளிக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.

நன்றி:http://tech.firstpost.com/news-analysis/microsoft-introduces-technologies-for-small-and-medium-businesses-in-india-351858.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

விளம்பரம்

“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்
கிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் வழங்குகிறது “இலவச இணையதள இடம்”

ஆம்,
“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”

மேலும் விபரங்களுக்கு
https://cloudsindia.in/
Mobile No : 9943094945

நேரடியாக பதிவு செய்ய
https://goo.gl/w5HlKV

இந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்..




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *