BREAKING NEWS:-
Search

சிறிய  மற்றும் குறைந்த செலவில் உருவாக்கப்படும் செயற்கை கோள்கள்!

உலக அளவில் குறைந்த செலவில் செயற்கைகோள்களை உருவாக்குவதில் இந்தியாவின் இஸ்ரோ முன்னணி வகிக்கிறது. இந்த நிலையில் நாசாவின் முன்னாள் விஞ்ஞானி மார்ஷல், தனது நிறுவனமான பிளானட் லேப்ஸ் என்ற நிறுவனத்தின் மூலமாக தற்போதுள்ள செயற்கைகோள்களை உருவாக்கும் செலவில் 1000ல் ஒரு பங்காக குறைத்து உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்.

இதன் மூலம் செயற்கைகோள் படங்களை  எடுப்பதற்கு வாரங்கள்  அல்லது சில மாதங்கள் ஆவதை குறைத்து நிகழ் நேர தகவல்களை பெற்று   பூமியின் மேற்பரப்பு தரவுகளை ஆராயமுடியும்  என்று  பிளானட் லேட் ஆய்வகத்தின்  தலைமை நிர்வாக அதிகாரி  மார்ஷல் தெரிவித்துள்ளார். இந்த செயற்கைக்கோள்களின் மூலம் எடுக்கப்படும் படங்களை   ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் ஆர்வமுள்ள நபர்களிடம்   கொடுக்க உள்ளார். இதன் மூலம் அந்தந்த துறைகளின் பல்வேறு பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

4 (1)

இவர்கள் உருவாக்கும் புதிய  டவ் வகை  செயற்கைகோளில்  மினியேச்சர், கேமரா தாங்கி செயற்கைக்கோள்களை இணைத்து அடுத்த ஆண்டு (2016) விண்வெளிப்பாதைக்கு அனுப்புவதற்கான  பணியாற்றிவருகிறார்கள்.

பெரும்பாலான செயற்கைக்கோள்களை பராமரிக்கும்  செயற்கைக்கோள்களில் ஒன்று லாண்ட்ஸாட் 8. அந்த செயற்கைகோளில்  மிகப்பெரிய கேமராக்கள், கைரோ-கவராயம், அலைப்பரப்பிகள் மற்றும் 5,783 பவுண்டுகள் எடையுள்ள மற்ற உபகரணங்கள் இருக்கிறது .இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க தேசிய புவியியல் ஆய்வின் மூலம் லாண்ட்ஸாட் 8 என்னும் செயற்கைகோள்  விண்ணில் செலுத்தப்பட்டது.

5

கிரக ஆய்வகத்தில் உள்ள  சிறிய டவ் செயற்கைகோளின் அளவு காலணி பெட்டியின் அளவே ஆகும். அதன்  எடை 8.8 பவுண்டுகள்  3.9 கி.கி) இது  உயர்திறன் மற்றும் உயர் அடர்த்தி கேமிராக்களை  கொண்டுள்ளது. லாண்ட்ஸாட் செயற்கைகோளில் உள்ள  மினியேச்சர் தவிர மற்ற அனைத்து  உபகரணங்களும்  டவ் வகை செயற்கைகோளில் உள்ளன.

இது பற்றி  மார்ஷல் கூறியதாவது: குறைந்த விலை  செயற்கைகோள்  பூமியில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும்  நிகழ்நேரத்தில்  நம்  பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்கள் ,  விவசாய தரவுகள், மற்றும் இதர வணிக தகவல்களுக்கு மிகப்பெரிய  மாற்றங்களை ஏற்படுத்தும்  என்று கூறினார்.

இந்த செயற்கைக்கோள்கள் தரும் தகவல்களை மேகக் கணிமை நுட்பம் மூலம் சேமித்து அதன் வழியாக எல்லா துறையினரும் பயன்படுத்தும்படி செய்ய இயலும். மேலும்  இதனை நவீன நுட்பமான பிக்டேட்டாவுடன் சேமித்து செயல்படுத்த , வகைப்படுத்த இயலும் என்றும் தெரிவித்தார்.

6 (1)

இந்த நிகழ்நேர தரவுகளின் அடிப்படையில் பெறும் புகைப்படங்கள் நமக்கு பல்வேறு வகையில் உதவியாக இருக்கும்.

இமயமலையில் எந்த சிகரங்களின் பனிப்பொழிவு அதிகமாக நிகழ்கிறது ? எந்த சிகரம் அதிக அளவில் தண்ணீராக மாறிவருகிறது ?எந்தெந்த பேரிடர் நேரத்தின் போது யாருக்கேனும் உதவித்தேவைப்பட்டால் அவர்களுக்கு உதவுவது, கர்நாடக அணைகளில் தண்ணீர் இருக்கிறதா ? இல்லையா என்று அளவிடுவது?

எங்கெங்கே என்னனென வகையான பயிர்களை உற்பத்தி செய்திருக்கிறார்கள் என்பது வரை இந்த செயற்கைக்கோள்களை வைத்து கண்டறிய இயலும்.

இதுதான்இந்த புதிய எடைகுறைந்த செயற்கைக்கோள் + நிகழ்நேர கணிமை +மேகக் கணிமை நுட்பம் + பிக்டேட்டா ஆகிய தொழில்நுட்பங்களின் பயன்

http://www.eetindia.co.in/ART_8800715795_1800010_NT_64f8b324.HTM?click_from=8800125045,9950228520,2015-09-18,EEIOL,ARTICLE_ALERT

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *