BREAKING NEWS:-
Search

சான் பிரான்சிஸ்கோ நகரின் பொதுப் போக்குவரத்து அமைப்பில் சைபர் தாக்குதல்..!

அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகராட்சியின் பொதுப் போக்குவரத்து கணினி அமைப்பில் ஹேக்கர்கள் சைபர் தாக்குதலை அரங்கேற்றியுள்ளனர். இதனால் சான் பிரான்சிஸ்கோ நகர பேருந்துகளில் பயணம் செய்ய அளிக்கப்படும் கட்டண பயணச்சீட்டுகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தொகையை அளித்தால் மட்டுமே, ஊடுருவல் நடத்தப்பட்ட கணினி அமைப்பை விடுவிப்போம் என சைபர் தாக்குதல் நடத்திய ஹேக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து ஹேக்கர்கள் கேட்ட தொகையானது பிட்காயினாக அளிக்கப்பட்டு, சான்பிரான்சிஸ்கோ நகர பொதுப் போக்குவரத்து அமைப்பு மீட்கப்பட்டுள்ளது. இது மாதிரியான சைபர் தாக்குதல்கள் உலகம் முழுவதும் அதிகரித்து வருவதாகவும், இதன் மூலம் பல கோடி டாலர்களை ஹேக்கர்கள் சம்பாதித்து வருவதாகவும் இணைய பாதுகாப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

பழைய இயந்திரங்கள் மற்றும் மேம்பாடு செய்யப்படாத அமைப்பு ஆகிய காரணங்களினால் இந்தியாவில் உள்ள கணினி அமைப்புகள் இது போன்ற சைபர் தாக்குதலை சந்திக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. 2016-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்தியாவில் செயல்படும் 180 நிறுவனங்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. ஹேக்கர்கள் கேட்ட பணயத் தொகையை அளித்தே இந்த தாக்குதல்களிலிருந்து அந்த 180 நிறுவனங்களும் தங்களை கணினி வலையமைப்பை மீட்டுள்ளன.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கிங் குழு ஒன்று ஹைதராபாத்தில் செயல்படும் 50 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தியது நினைவிருக்கலாம். நிறுவனங்கள் தவிர்த்து வீடியோ கேம்களை தங்கள் கணினியில் சேமிக்கும் சமுதாய அந்தஸ்துள்ள பெரிய மனிதர்கள், அந்த வீடியோ கேம்களின் வழியாக சைபர் தாக்குதலில் சிக்கிக் கொண்டிருக்கின்றனர்.

அடிக்கடி கடவுச் சொற்களை மாற்றாததும், எளிதாக கண்டறியும் வகையில் கடவுச் சொற்களை வைப்பதும் இது போன்ற சைபர் தாக்குதலுக்கு காரணமாகின்றன என கூறப்படுகிறது. ஐ.பி எண்ணைக் கொண்டு ஆராயும் போது பெரும்பாலான சைபர் தாக்குதல்கள் அமெரிக்கா மற்றும் சீனாவிலிருந்து செயல்படுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது. எனவே இணையம் மூலம் செயல்படும் நிறுவனங்கள் தங்கள் பாதுகாப்பை பல மடங்கு அதிகரித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நன்றி:http://tech.firstpost.com/news-analysis/san-francisco-public-transport-system-hack-demonstrates-how-malware-affects-the-real-world-350157.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

விளம்பரம்

“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்
கிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் வழங்குகிறது “இலவச இணையதள இடம்”

ஆம்,
“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”

மேலும் விபரங்களுக்கு
https://cloudsindia.in/
Mobile No : 9943094945

நேரடியாக பதிவு செய்ய
https://goo.gl/w5HlKV

இந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்..




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *