BREAKING NEWS:-
Search

சவுதியில் தற்கொலைப்படை தாக்குதல்; 10 பேர் பலி

ரியாத் : சவுதி அரேபியாவின் கிழக்கில் குவாதிப் என்ற பகுதியில் அல் குவாதி கிராமம் இருக்கிறது. இங்குள்ள ஷியா பிரிவினருக்கான இமாம் அலி மசூதியில் இன்று தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. சக்தி வாய்ந்த குண்டு வெடிதததில், 10 பேர் கொல்லப்பட்டனர், 70 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சமீப காலத்தில் ஷியா மற்றும் சன்னி பிரிவு முஸ்லிம்களிடையே கடும் சண்டை நடந்து வரும் வேளையில், சவுதி அரேபியாவில் இம்மாதிரியான தாக்குதல் நடத்தப்பட்டது அந்நாட்டு மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *