BREAKING NEWS:-
Search

சலுகைகளை அள்ளித் தரும் ஏர்டெல்..!

இந்திய செல்பேசி தொலை தொடர்புத் துறையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கால் ஊண்றியதிலிருந்து, அதற்கு போட்டியாக மற்ற நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை அள்ளித் தந்து வருகின்றன. வாடிக்கையாளர்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அளித்து வந்த சலுகை, ஏப்ரல் 15-ஆம் தேதியுடன் நிறைவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இதுவரை அளித்து வந்த இலவச  சலுகைகளை, கட்டணத்துடன்  அளிக்க  ஜியோ நிறுவனம் தயாராகி வருகிறது.

இதுவரை  இலவசமாக பெற்ற சலுகையை, பணம் செலுத்திப் பெற ஜியோ வாடிக்கையாளர்களில் ஒரு பகுதியினர் தயங்குகின்றனர். இந்த சூழலை  தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்துள்ள ஏர்டெல் போன்ற மற்ற தொலைதொடர்பு நிறுவனங்கள், ஜியோவுக்கு போட்டியாக பல புதிய சலுகைகளை அறிவித்துள்ளன.

இந்த வரிசையில் ஏர்டெல் நிறுவனம் ரூ.244, ரூ.399 மற்றும் ரூ.345 ஆகிய கட்டணங்களில் மூன்று வகையான சலுகைகளை அறிவித்துள்ளது. ரூ.244 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினந்தோறும் ஒரு ஜி.பி அளவுக்கு இணையவசதி அளிக்கப்படும். மேலும் தினசரி 300 இலவச அழைப்புகளும்,ஏர்டெல் செல்பேசிகளுக்குள் பேசிக்கொள்ள  வாரந்தோறும் 1200 இலவச அழைப்புகளும் அளிக்கப்படும். இதற்கு மேல் ஒரு நிமிடத்திற்கு 10 காசுகள் கட்டணமாக வசூலிக்கப்படும். இதன் கால அளவு 70 நாட்கள்.

399 ரூபாய் சலுகையில் தினசரி 1 ஜி.பி இணைய வசதி அளிக்கப்படும். தினசரி 300 இலவச அழைப்புகளும்,ஏர்டெல் செல்பேசிகளுக்குள் பேசிக்கொள்ள  வாரந்தோறும் 1200 இலவச அழைப்புகளும் அளிக்கப்படும். இதற்கு மேல் ஒரு நிமிடத்திற்கு 10 காசுகள் கட்டணமாக வசூலிக்கப்படும். இதன் கால அளவு 70 நாட்கள்.

344 ரூபாய் சலுகையில் ஒரு நாளுக்கு 2 ஜி.பி இணைய வசதி அளிக்கப்படும். தினசரி 300 இலவச அழைப்புகளும்,ஏர்டெல் செல்பேசிகளுக்குள் பேசிக்கொள்ள  வாரந்தோறும் 1200 இலவச அழைப்புகளும் அளிக்கப்படும். இதற்கு மேல் ஒரு நிமிடத்திற்கு 10 காசுகள் கட்டணமாக வசூலிக்கப்படும். இதன் கால அளவு 70 நாட்கள்.

http://airtel.in

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *