BREAKING NEWS:-
Search

சர்ச்சைக்குரிய சமூக வலைத்தள கருத்தினால் ஒடிசாவில் இணையதள வசதிக்கு தடை..!

சமூக வலைத்தளங்களில் வன்முறையை தூண்டக்கூடிய வகையில், சர்ச்சைக்குரிய கருத்துகள் பரப்பப்பட்டதால் ஒடிசாவில் 48 மணி நேரத்திற்கு இணைய சேவைகள் துண்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

”ஒடிசாவின் நகர்ப்பகுதிகளில் மாலை 3 மணி முதல் அடுத்த 48 மணி நேரத்திற்கு இணைய வசதிகள் துண்டிக்கப்படுகின்றன.” என ஒடிசா மாநில உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது. கேந்திரபாரா மாவட்ட நிர்வாகம் அளித்துள்ள அறிவுறுத்தலை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில உள்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

”பதற்றம் அதிகமுள்ள பகுதிகளில் சமூக வலைத்தள கருத்துகளால் வன்முறை சம்பவங்கள் தூண்டிவிடப்பட கூடாது என்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இணையவசதிகள் அடுத்த 48 மணி நேரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளன. தங்களின் நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பரபரப்படுவதாக பலர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.” என கேந்திரபாரா மாவட்ட ஆட்சியர் முரளிதர் தெரிவித்துள்ளார்.

மேலும் சர்ச்சைகுரிய கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சைபர் குற்ற காவல்துறையினருக்கு கேந்திரபாரா மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தற்போது கேந்திரபாராவில் நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லீம் சிறுவன் ஒருவன் முகநூலில் மற்றொரு தரப்பினர் மீது தரக்குறைவான கருத்தை தெரிவித்ததை தொடர்ந்து ஒடிசா மாநிலத்தில் உள்ள பர்தக் மாவட்டத்தில் வன்முறை மூண்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பல வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.

நன்றி:

http://telecom.economictimes.indiatimes.com/news/internet-service-suspended-in-odishas-kendrapara/58272876




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *