BREAKING NEWS:-
Search

கேலக்சி எஸ் 7 திறன்பேசி பாதுகாப்பானது : சாம்சங் நிறுவனம் அறிவிப்பு..!

கேலக்சி நோட் 7 போன்கள் தீப்பற்றும் சர்ச்சையில் சிக்கியதால் பெரும் நஷ்டத்தை சந்தித்த சாம்சங் நிறுவனத்திற்கு அடுத்து அதிர்ச்சி தரும் வகையில், கேலக்சி எஸ் 7 திறன்பேசிகள் தீப்பிடித்ததாக புகார்கள் எழுந்தன. ஆனால் இதனை மறுத்துள்ள சாம்சங் நிறுவனம், கேலக்சி எஸ் 7 வகை திறன்பேசிகள் அனைத்தும் பாதுகாப்பானவை என அறிவித்துள்ளது.

”கேலக்சி எஸ் 7 ரக திறன்பேசிகளின் பாதுகாப்பு மற்றும் தரத்தை நாங்கள் உறுதி செய்துள்ளோம். இது வரை இந்த வகை திறன்பேசிகளின் பேட்டரிகள் செயழிலந்துவிட்டதாகவோ அல்லது தீப்பிடித்து எரிந்ததாகவோ எந்த உறுதிப்படுத்தப்பட்ட புகார்களும் எங்களுக்கு வரவில்லை. தற்போது எஸ் 7 திறன்பேசிகளை அமெரிக்காவில் மட்டும் 10 மில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எஸ் 7 போன் தீப்பிடித்ததாக வந்த புகார்கள் அனைத்தும், வெளிப்புற சூழல் காரணமாக நடந்தவைதானே தவிர, பேட்டரி சூடாகியதால் நடந்தவை அல்ல.” என சாம்சங் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சில வாரங்களுக்கு முன்னர், எஸ் 7 திறன்பேசிகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் குறுந்தகவல் அனுப்பிய சாம்சங் நிறுவனம், அவர்களுடைய திறன்பேசியில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் தங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது. ஆனால் இதுவரை அப்படி ஒரு புகார் கூட வரவில்லை என சாம்சங் உறுதி செய்துள்ளது.

சமீபத்தில் கால்சட்டை பையில் வைத்திருந்த சாம்சங் எஸ் 7 திறன்பேசி தீப்பிடித்ததால், தன்னுடைய கை மற்றும் மணிக்கட்டில் தீக்காயம் ஏற்பட்டதாக ஒருவர் புகார் தெரிவித்திருந்தார். மற்றொரு புகாரில் இரவு முழுக்க எஸ் 7 திறன்பேசியை சார்ஜ் செய்த பின்னர், காலை தீப்பற்றி எரிந்ததாக கூறப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து எஸ் 7 திறன்பேசிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சாம்சங் நிறுவனம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

நன்றி:http://gadgets.ndtv.com/mobiles/news/samsung-galaxy-s7-family-is-safe-says-company-after-reports-of-explosions-1628042

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

விளம்பரம்

“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்
கிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் வழங்குகிறது “இலவச இணையதள இடம்”

ஆம்,
“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”

மேலும் விபரங்களுக்கு
https://cloudsindia.in/
Mobile No : 9943094945

நேரடியாக பதிவு செய்ய
https://goo.gl/w5HlKV

இந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்..




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *