BREAKING NEWS:-
Search

கேரளாவில் யானைகளுக்கும் ஆம்புலன்ஸ் சேவை

உடல்நிலை சரியில்லாத மற்றும் காயமடைந்த யானைகளுக்கு கேரளாவில் விரைவில் ‘ஆம்புலன்ஸ்’ சேவை. முதல் முறையாக, மாநில வனத்துறை விலங்குகளுக்காக ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கியுள்ளது.  இது வட கேரளாவில் உள்ள வயநாடு வனவிலங்கு சரணாலயத்தில் (WWS) உள்ள யானைகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆம்புலன்ஸ் மாற்றியமைக்கப்பட்ட லாரி வடிவில் உள்ளது. இது காயமடைந்த மற்றும் உடல்நிலை சரியில்லாத யானைகளுக்காக, அவசர நேரத்தில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு யானைகளை மாற்றும் போக்குவரத்துக்கு இந்த ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த ஆம்புலன்ஸ் வாகனம் விலங்குகளுக்கு பெரிய உதவியாக இருக்கும் என்று வனத்துறையின் மூத்த அதிகாரி கூறுகிறார்.

2 (1)

இந்த வாகனம் விலங்குகளை ஏற்ற கயிறுகள் மற்றும் கிரேன்கள் போன்ற வசதிகளை கொண்டுள்ளது. யானைகளுக்கு போக்குவரத்து காலங்களில் சிறப்பு தண்ணீர் வசதியும் இதில் அமைக்கப்பட்டுள்ளது என்று WWS வனவிலங்கு பாதுகாவலர் P Dhanesh Kumar தெரிவித்தார்.

விலங்குகள் நகரும் தன்மையை கட்டுப்படுத்த வாகனத்தில் சிறப்பு அமைப்பு உள்ளது. இந்த வாகனத்தில் விலங்குகளுக்கான மருந்துகள் மற்றும் உணவுபொருட்களை வைக்கவும் இடவசதி உள்ளது என்றும் அவர் கூறினார்.

3 (1)

நீலகிரி உயிர்க்கோள ரிசர்வ் பகுதியில் ஒன்றான வயநாடு வனவிலங்கு சரணாலயம், தமிழ்நாட்டில் உள்ள முதுமலை வன விலங்கு சரணாலயம் மற்றும் பந்திபூர்,கர்நாடகாவில் உள்ள Nagarahole தேசிய பூங்காவிற்கும் அருகில் இருக்கிறது.

45 பாலூட்டி இனங்களும், 203 பறவை இனங்கலும், 10 தனிசிறப்பு மிக்க விலங்குகளும், 5 உலகளவில் அச்சுறுத்தப்பட்ட இனங்களும் இங்கு காணப்படுகின்றன.

http://www.business-standard.com/article/pti-stories/now-elephants-get-ambulance-service-in-kerala-115110500636_1.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *