BREAKING NEWS:-
Search

கூடங்குளத்தில் மீண்டும் மின்உற்பத்தி

தொழில்நுட்ப கோளாறுகளால் கூடங்குளம் அணுமின் நிலையம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1000 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அலகுகள் உள்ளன. முதலாவது அலகில், ஆய்வு பணிகள் மற்றும் சில தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் முதல் இதில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. ஆய்வுகள் நிறைவடைந்து நேற்று இரவு 10 மணி முதல் மீண்டும் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணி வரை இதன் மின்உற்பத்தி 400 மெகாவாட்டை எட்டி உள்ளது.மேலும் டிசம்பர் 11ம் தேதி இந்தியா வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், கூடங்குளம் அணுஉலையை நேரில் பார்வையிட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *