BREAKING NEWS:-
Search

கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனத்திடம்  மோடி பரிந்துரைத்தது என்ன?

பிரதமர் நரேந்திர மோடி  சிலிக்கான் பள்ளத்தாக்கிற்கு  இந்த வார இறுதியில் பயணம் செய்ய இருக்கிறார். ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனத்தின்   பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க உள்ளார்.

பேஸ்புக் மற்றும் கூகுள்  நிறுவனத்திற்கு இந்தியா ஒரு முக்கிய சந்தையாக  உள்ளது. 1.3 பில்லியன் மக்கள் தொகை உடன் இந்தியா உலகின் இரண்டாவது  நாடாக இருக்கிறது. 30 ஆண்டுகளுக்கு பிறகு  இந்திய தலைவரான மோடி, அமெரிக்காவில் உள்ள  மேற்கு கடற்கரைக்கு  பயணம்  செய்ய உள்ளார் . அவர் ” டிஜிட்டல் இந்தியா” உட்பட அவருடைய உயர்மட்ட கொள்கையின்  முயற்சிகள் குறித்து வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் உதவிப்பெற பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடையை கொள்கையின் முக்கிய நோக்கம் ஆயிரக்கணக்கான இந்திய கிராமங்களில் இணைய சேவையை கொண்டுவந்து  அதன் மூலம்  தொழில்நுட்ப வேலைகளை உருவாக்குவதற்கு முயற்சி  மேற்கொண்டு வருகிறார். அவர் பேஸ்புக் மற்றும் கூகுள் நிர்வாகிகள், சீன ஜனாதிபதி g.Jingping இந்த வாரம்  சியாட்டில் சந்திக்க  திட்டமிட்டுள்ளார்.

மோடி கூகுள் நிறுவனத்திற்கு சென்று பார்வையிட உள்ளார்.  மேலும் , பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கை ஒரு டவுன் ஹாலில் சந்திக்க உள்ளார். இந்தியாவில்  9%  வேலை வாய்ப்பினை  கொடுக்க  ஆண்டு முழுவதும்  உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை  பராமரிக்க வேண்டும், ஆனால் தற்போது சுமார் 7 % விகிதம் தான்  உள்ளது. அதிலும், தொழில்நுட்பத்தில் தான் வேலை வாய்ப்பு  விகிதம் அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில்  இந்திய மக்களை ஊழியர்களாக நியமித்தது.ஆனால், தற்போது அந்த நிறுவனத்தில் பணி புரியும் இந்தியர்களின் எண்ணிக்கையை விரைவாக குறைத்துள்ளது. ஆதலால், மோடி  பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனத்தின்  ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையங்களை இந்தியாவில் ஆரம்பிக்க வேண்டும் என்றும், அங்கு இந்திய மக்களையே ஊழியர்களாக  நியமிக்க வேண்டும்  என்று   அழுத்த திருத்தமாக  கூறினார்.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *