BREAKING NEWS:-
Search

கூகுளின் புதிய ‘ Stay in the Loop’ வசதி..!

தேடு பொறிகளின் தலைவனான கூகுள் தனது பயனாளர்களை கவர்வதற்காக தொடர்ந்து பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. அந்த வரிசையில் Stay in the Loop என்ற புதிய வசதி தற்போது கூகுள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வசதியின்படி உங்களுடைய பெயர் இணையத்தில் தேடப்பட்டாலோ அல்லது குறிப்பிடப்பட்டாலோ, எந்த இடத்தில் உங்கள் பெயர் தேடப்பட்டது? எதற்காக தேடப்பட்டது? என்பது குறித்த அனைத்து விபரங்களையும் உங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு கூகுள் அனுப்பி வைக்கும்.

தங்களைப் பற்றி இணையத்தில் என்ன இருக்கிறது என அறிய விரும்புபவர்களுக்காக இந்த புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதமே இந்த வசதி கூகுளில் வந்துவிட்டாலும், பல கட்டங்களாக மேம்படுத்தப்பட்டு தற்போதுதான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நீங்களும் இந்த புதிய வசதியை பெற வேண்டுமென்றால், முதலில் உங்கள் கூகுள் கணக்கை லாக் இன் செய்து வைக்க வேண்டும். பின்னர் உங்கள் கணக்கின் Web மற்றும் App Activity-யை ஆராய கூகுளுக்கு நீங்கள் அனுமதி அளிக்க வேண்டும். இதனை தொடர்ந்து கூகுளின் முதல் பக்கத்தில், தேடுதல் முடிவுகளுக்கு கீழ் இந்த வசதி குறித்த தகவல்கள் திரையில் தெரியும். அவற்றை நீங்கள் பின் தொடர்ந்து உங்கள் பெயரில் இந்த வசதியை தொடங்கலாம்.

ஆனாலும் இந்த சேவையின் நன்மை தீமை என்னவென்று பார்க்கும்போது இணையத்தில் யார் யார் நம்மை பற்றி பேசியிருக்கிறார்கள் என்பது நம் கவனத்திற்கு வரும். தீமை என்று வரும்போது நம்மைப் பற்றி பேசும் எல்லா தகவல்களையும் திரட்டி ஒரு தொகுப்பில் கூகிள் வைத்திருக்கும். அது நல்லதுக்கும் பயன்படலாம் , மற்றவைக்கும் பயன்படுத்தலாம்.

மேலும் கூகிள் நிறுவனம் கூகிள் அலெர்ட் என்ற சேவையை அளித்துவருகிறது. இதன் மூலம் நீங்கள் தேட விரும்பும் செய்தியை கொடுத்துவிட்டால் தினமும் கூகிள் அது சம்பந்தமான எல்லா புதிய செய்திகளையும் உடனுக்குடன் திரட்டி உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பிவிடும்.

நன்றி: http://tech.firstpost.com/news-analysis/google-searchs-new-feature-will-notify-you-whenever-your-name-is-mentioned-on-the-web-327590.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *