BREAKING NEWS:-
Search

குறைபாடு காரணமாக 53,000 கார்களை திரும்பப்பெறும் டெஸ்லா..!

பிரபல மின்சார கார்கள் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, தனது மாடல் எஸ் மற்றும் மாடல் எக்ஸ் ஆகிய கார்களில் பார்க்கிங் பிரேக் செயல்பாடுகள் குறித்து புகார்கள் வந்ததால், அந்த இரு ரகங்களைச் சேர்ந்த 53,000 கார்களை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் பங்குகள் 1 சதவீதம் சரிந்தது.

கடந்த 2016-ஆம் ஆண்டு இந்த இரு ரகங்களையும் சேர்த்து, சுமார் 83,922 கார்களை மட்டுமே டெஸ்லா உற்பத்தி செய்திருந்தது. ”மாடல் எஸ் மற்றும் மாடல் எக்ஸ் ரக கார்களில் பொருத்தப்பட்டிருக்கும் பார்க்கிங் பிரேக், கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் தயாரிக்கப்பட்டது. இந்த பிரேக்குகளை எங்களுக்கு தயாரித்து அளித்த நிறுவனம், தரமில்லாத வகையில் அவற்றை உருவாக்கியுள்ளது தெரியவந்துள்ளது.” என டெஸ்லா தெரிவித்துள்ளது. ஆனால் இந்த பிரேக் குறைபாட்டால் எந்த விபத்தும் நடக்கவில்லை என அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

திரும்ப அழைக்கப்படும் கார்களில், புதிய பார்க்கிங் பிரேக் பொருத்த வெறும் 45 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என டெஸ்லா உறுதியளித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை, தனது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் டெஸ்லா அனுப்பியுள்ளது. கடந்த ஆண்டு டெஸ்லாவின் தயாரிப்பான மாடல் எக்ஸ் ஸ்போர்ட் என்ற ரக காரில், கதவு பூட்டப்படும் வசதியில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக 2,700 கார்கள் திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

நன்றி:

http://tech.firstpost.com/news-analysis/tesla-will-recall-53000-cars-globally-to-fix-a-parking-brake-issue-372746.html




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *