BREAKING NEWS:-
Search

காலநிலை மாற்றத்திற்கு புவி அச்சின் சாய்வே காரணம்

Louisiana State University ஆராய்ச்சியாளர்கள் தற்போது காலநிலையை பற்றி ஆராய்ச்சி செய்ததில் ஒரு சரியான தகவல் நகமக்கு கிடைத்துள்ளது. இது என்னவென்றால் பூமியின் காலநிலை மாறுபாட்டிற்கு காரணம் பூவி அச்சின் சாய்வுதான் என்று கூறுகின்றனர். இதனால் பூமியின் Roundbelt அதிக அளவு பாதிக்கப்படுகிறது. Delong கடந்த பல ஆயிரம் ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவின்படி புவியின் சாய்வு காரணமாகவே வெப்பம், குளிர், மேகங்களில் குறைந்த அழுத்தம் ஆகியவை ஏற்படுகிறது என்பதை கண்டறிந்துள்ளனர்.

இதனால் ஒவ்வொரு 41,000 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் புவியில் மாற்றம் நிகழும். சீன தொழில்நுட்பம் மற்றும் தேசிய தைவான் பல்கலைக்கழக ஆராச்சியாளார்களின் ஒத்துழைப்புடன் புவியின் ஓட்டினை பற்றி ஆராய, சீனாவின் பண்டைய குகைகளிலிருந்து Stalagtite மாதிரிகள், கடற்கரையில் இருந்து படிவக்கற்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து பார்த்ததில் காலாநிலை மாற்றத்திற்கு புவி அச்சின் சாய்வே காரணம் என்பது தெளிவாக தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு மிலான் கோவிட்ச் என்று அழைக்கப்படுகிறது. புவியின் சாய்வு குளிர் காலங்களில் மாற்றமடைகிறது. இது 23,000 வருட சுழற்சியில் நிகழும். இதே போன்று 41,000 வருட சுழற்சியில் வெப்ப மண்டல மாற்றம் நிகழும் என்று டிலாங் என்ற ஆய்வாளர் கூறினார்.

இந்த கண்டுபிடிப்பு மூலம் புவியின் அச்சு சாய்வு தீவிர வானிலை நிகழ்வுகளை ஏற்படுத்துகிறது என்பது தெரிய வந்துள்ளது. இதன் அடிப்படையில் பூமியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் (Intertropical Convergence Zone) ITCZ விரிவடைவதால் அந்த பகுதியில் காலநிலை மாற்றம் அதிகம் நிகழ்கிறது.

http://www.sciencedaily.com/releases/2015/12/151214142053.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *