BREAKING NEWS:-
Search

காகிதத்தில் உருவாக்கப்பட்டுள்ள நுண்ணோக்கி..!

பல்வேறு பொருட்களில் உள்ள நுண்ணிய கிருமிகளை பெரிதாக்கி பார்க்க உதவும் நுண்ணோக்கிகள் ஓரளவு அதிக விலையுடையவை. இதனால் பலரால் இதனை வெறும் காட்சிப் பொருளாக பார்க்க முடியுமே தவிர, அதனை இயக்கிப் பார்க்கும் வாய்ப்புகள் மிகக்குறைவு.

ஆனால் இந்த குறையை போக்கும் வகையில் மிகவும் விலை குறைந்த, சாதாரண காகிதத்தால் நுண்ணோக்கி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. விலை குறைந்த அறிவியல் உபகரணங்களை உருவாக்கி வரும் மனு பிரகாஷ் என்பவர் இந்த பேப்பர் நுண்ணோக்கியை உருவாக்கியுள்ளார். இதற்கு ”ஃபோல்ட் ஸ்கோப்” என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த ஃபோல்ட் ஸ்கோப்பானது அதனுள் உள்ள லென்சை பொறுத்து விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடிப்படை ரக ஃபோல்ட் ஸ்கோப்பிற்கு 15 அமெரிக்க டாலர்கள் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஃபோல்ட் ஸ்கோப்பை தனித்தனியாக பிரித்து, வெறும் பத்து நிமிடங்கள் சேர்த்துவிட முடியும். இதனால் இதனை எங்குவேண்டுமானாலும் கையோடு எடுத்துச் செல்லலாம்.

இந்த ஃபோல்ட் ஸ்கோப்பில் ஒளியை உமிழக்கூடிய டையோடு, எல்.இ.டி விளக்குகள் உள்ளன. மேலும் லென்ஸ் ஒன்றும் இதனுள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த ஃபோல்ட் ஸ்கோப்பிற்கு மனு பிரகாஷ் காப்புரிமை வாங்கியுள்ளார் என்பதால், அது எப்படி இயங்குகிறது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. இந்த ஆண்டு சுமார் 50,000 போல்ட் ஸ்கோப் விற்பனையாகியுள்ளது. அடுத்த ஆண்டு இது இரண்டு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போல்ட் ஸ்கோப் குறித்த வீடியோ தொகுப்பை https://www.ted.com/talks/manu_prakash_a_50_cent_microscope_that_folds_like_origami  என்ற தொடர்பில் பார்க்கலாம்.

நன்றி:http://www.popsci.com/you-can-finally-reserve-your-own-paper-microscope

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

விளம்பரம்

“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்
கிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் வழங்குகிறது “இலவச இணையதள இடம்”

ஆம்,
“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”

மேலும் விபரங்களுக்கு
https://cloudsindia.in/
Mobile No : 9943094945

நேரடியாக பதிவு செய்ய
https://goo.gl/w5HlKV

இந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்..




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *