BREAKING NEWS:-
Search

கல்லூரிகளில் பாடமாகும் ”போக்கிமான் கோ”

சமீபத்தில் ஸ்மார்ட்போன் உலகத்தையே அதிர வைத்த போக்கிமான் கோ விளையாட்டு, இளைஞர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. நியாண்டிக் நிறுவன தயாரிப்பான இந்த விளையாட்டு ஜி.பி.எஸ் கருவி மூலம் இயங்கக்கூடியது. இந்த விளையாட்டு நியாண்டிக் நிறுவன தயாரிப்பாக இருந்தாலும், இதற்கான சர்வர் வசதிகளை மேம்படுத்துவதற்காக கூகுள் நிறுவனத்தின் ஒரு கணினி பொறியாளர்கள் குழு இதன் பிண்ணனியில் வேலை பார்த்தது.

தொழில்நுட்பம் மட்டுமல்லாது வியாபார ரீதியாகவும் போக்கிமான் கோ வெற்றி பெற்றதால், உலகிலுள்ள பல்வேறு கல்லூரிகள் தங்கள் பாடத்திட்டத்தில் போக்கிமான் கோ விளையாட்டு குறித்த பாடங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன. இந்த பாடங்களானது தொழில்நுட்பங்கள், பயனாளர்கள் மற்றும் வியாபாரம் ஆகியவற்றுக்கு இடையிலான உறவு குறித்ததாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக இங்கிலாந்தில் உள்ள சால்போர்டு பல்கலைகழகத்தில் போக்கிமான் கோ பாடம் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வியாபார ரீதியாக ஸ்மார்ட்போன் குறுஞ்செயலிகளை எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்தும் இந்த பாடத்தில் விளக்கப்படும்.

இந்த புதிய முயற்சி மூலம் போக்கிமான் கோ போன்ற விளையாட்டுகளை வியாபார ரீதியாக வெற்றியடையச் செய்ய தேவையான புதிய தொழில்நுட்பங்களையும், எண்ணங்களையும் மாணவர்கள் உருவாக்க முடியும் என பல்கலைகழகங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

நன்றி:http://tech.firstpost.com/gaming/pokemon-go-is-becoming-a-part-of-the-course-curriculum-in-colleges-around-the-world-338591.html?utm_source=top_stories

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *