BREAKING NEWS:-
Search

கலாம் படத்துக்கு மாலை; அதிர்ச்சி கொடுத்த அமைச்சர்

கோதர்மா : ஜார்கண்ட் மாநிலத்தில் பள்ளி விழா ஒன்றில் கல்வித்துறை அமைச்சர் நீரா யாதவ் கலந்து கொண்டார். அங்கிருந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் போட்டோவிற்கு மாலை அணிவித்து, படத்துக்கு பொட்டு வைத்தார். விழாவில் கலந்து கொண்ட பா.ஜ., எம்.எல்.ஏ., மற்றும் பள்ளி தலைமை ஆசிரியரை, அமைச்சரின் இந்த செய்கை அதிர்ச்சி அடைய வைத்தது. உயிருடன் இருப்பவரின் போட்டோவுக்கு மாலை அணிவிப்பது தவறு என்றும், அவரது நமது முன்னாள் ஜனாதிபதி என்பதும் தெரியாமல் கல்வி அமைச்சர் உள்ளாரே என பல தரப்பினரும் கேள்வி எழுப்பினர். ‘கலாம் படத்தக்கு பொட்டு மட்டுமே நான் வைத்தேன். படத்துக்கு முன்னரே மாலை போடப்பட்டு இருந்தது. பா.ஜ., அரசின் புகழை சீர் குலைக்கவே இது போன்ற தவறான தகவல்களை சிலர் பரப்புகின்றனர்,’’ என்று நீரா யாதவ், தான் செய்த அபத்தமான விஷயத்தை நியாயப்படுத்தி உள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *