BREAKING NEWS:-
Search

கருவிலிருக்கும் சிசுவை இனி முப்பரிமாணத்தில் பார்க்கலாம்..!

தாயின் வயிற்றில் இருக்கும் சிசுவின் வளர்ச்சியை முப்பரிமாணத்தில் பார்க்கக் கூடிய புதிய தொழில்நுட்பத்தை பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த தொழில்நுட்பமானது காந்த ஒத்திசைவு பட தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து, சிசுவின் முப்பரிமாண படத்தை அளிக்கும்.

தாயின் கருவில் இருக்கும் சிசுவை காந்த ஒத்திசைவு படமாக எடுக்கும் போது, மிகத் தெளிவாக சிசுவின் அமைப்பு கிடைக்கும். இந்த காந்த ஒத்திசைவு புகைப்படங்களை அடிப்படையாகக் கொண்டு, முப்பரிமாணத்தில் ஒரு சிசுவின் உருவமானது உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் ஸ்கேன் படங்களில் இருபரிமாணமாக பார்த்த தங்கள் குழந்தையை, முப்பரிமாணத்தில் பெற்றோர்கள் பார்க்க முடியும்.

கர்ப்பப்பையில் உள்ள கருவின் வளர்ச்சி குறித்து மருத்துவ மாணவர்களுக்கு பாடம் எடுக்க இந்த முப்பரிமாண தொழில்நுட்பமானது பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தொழில்நுட்பத்தில் சில மாற்றங்களைச் செய்து, பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் இந்த புதிய கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளனர்.

பல்வேறு கோணங்களில் எடுக்கப்பட்ட காந்த ஒத்திசைவு படங்களைக் கொண்டு சிசுவின் மாதிரி முப்பரிமாண படமானது உருவாக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து இந்த முப்பரிமாணத்தில் இருக்க வேண்டிய மாற்றங்களை மருத்துவர் ஒருவர் சுட்டிக்காட்டுவார். அதனைத் தொடர்ந்து அதில் மேலும் சில மாற்றங்கள் செய்யப்படும்.

இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் கருவில் உள்ள சிசுவுக்கு இருக்கக் கூடிய குறைபாடுகளை, முப்பரிமாண படத்தை காட்டி தெளிவாக விளக்க முடியும். ஏனெனில் சாதாரண ஸ்கேன்களில் குழந்தைகளின் அமைப்பை மிகத் தெளிவாக பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி:http://tech.firstpost.com/news-analysis/unborn-babies-can-now-be-seen-in-3d-vr-models-348966.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

 

விளம்பரம்

“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்
கிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் வழங்குகிறது “இலவச இணையதள இடம்”

ஆம்,
“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”

மேலும் விபரங்களுக்கு
https://cloudsindia.in/
Mobile No : 9943094945

நேரடியாக பதிவு செய்ய
https://goo.gl/w5HlKV

இந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்…




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *