BREAKING NEWS:-
Search

கருப்புப் பண எதிர்ப்பு நடவடிக்கை : பே டிஎம் லாபம் அதிகரிப்பு..!

கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளினால், நாட்டில் பணப்புழக்கம் குறைந்துள்ளது. வரவு மற்றும் பற்று அட்டைகள் மூலமாகத்தான் எளிதாக பணப் பரிமாற்றம் செய்ய முடியும் என்ற சூழல் உள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை பற்று மற்றும் கடன் அட்டைகளைக் கொண்டு, வர்த்தக இணையதளங்கள் மூலம் வாங்கி வருகின்றனர். இதனால் இந்த இணையதளங்களின் வருவாய் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்து வருகிறது.

குறிப்பாக செல்பேசி பணப் பரிவர்த்தனை நிறுவனமான ”பே டிஎம்”, ஒரு நாளுக்கு சுமார் 5 மில்லியன் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் இதுவரை 24,000 கோடி ரூபாய் தொகை பறிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த தொகை இதற்கு முன்னர் எந்த செல்பேசி பணப்பரிமாற்ற நிறுவனத்தினாலும் கையாளப்பட்டதில்லை எனவும் பே டிஎம் தெரிவித்துள்ளது.

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டதிலிருந்து, பே டிஎம் நிறுவனத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 700 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் கடந்த வாரத்தை விட, இந்த வாரம் 1000 மடங்கு தொகை இந்த நிறுவனத்தால் கையாளப்பட்டுள்ளது. மேலும் பே டிஎம் குறுஞ்செயலியை தரவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கையும் 300 சதவீதம் அதிகரித்துள்ளது. பே டிஎம் மூலமாக ஒரு வாரத்திற்கு மூன்று பணப்பரிமாற்றம் செய்த ஒருவர், தற்போது வாரத்திற்கு 18 பணப்பரிமாற்றத்தில் ஈடுபடுகிறாராம்.

பே டிஎம் நிறுவனம் மட்டுமல்லாமல் சக செல்பேசி பணப்பரிமாற்ற நிறுவனங்களான ஃப்ரீ சார்ஜ், மொபிகுவிக் ஆகிய நிறுவனங்களும் எதிர்பாராத வளர்ச்சியை கடந்த ஒரு வாரத்தில் அடைந்துள்ளன. இணையதளம் மூலமாக மளிகைப் பொருட்களை விற்று வரும் ”பிக் பேஸ்கட்” இணையதளமும் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது.

கடன் மற்றும் பற்று அட்டைகள் உதவியுடன் உணவகங்களில் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாம். இதனால் உணவுத்துறையும் கடந்த சில நாட்களாக இருந்த சுணக்க நிலையிலிருந்து மீண்டு வரத் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

நன்றி:http://tech.firstpost.com/startup/demonetisation-while-fintech-startups-gain-some-sectors-will-face-temporary-downfall-says-report-347530.html

விளம்பரம்

“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்
கிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் வழங்குகிறது “இலவச இணையதள இடம்”

ஆம்,
“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”

மேலும் விபரங்களுக்கு
https://cloudsindia.in/
Mobile No : 9943094945

நேரடியாக பதிவு செய்ய
https://goo.gl/w5HlKV

இந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்…




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *