BREAKING NEWS:-
Search

கனவுகளை தூண்டும் கருவி..!

ஆழ் மனதின் எண்ணங்களே கனவுகளாக வருகின்றன என உளவியல் துறையின் தந்தை சிக்மண்ட் பிராய்ட் தெரிவித்துள்ளார். ஆனாலும் கனவுகளை நமது சொந்த வாழ்க்கையில் தொடர்புபடுத்தி பார்க்கும் வழக்கம் இன்னும் மனிதர்களிடையே அகலவில்லை. எனவேதான் கனவுகளில் நடப்பவை நிகழ்காலத்திலும் நடக்கும் என பலர் நம்பிக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் சிலருக்கு தனது கனவுகள் தெளிவாக இல்லை எனவும் அவற்றில் ஆச்சரியமான கற்பனை கதாபாத்திரங்கள் வருவதில்லை எனவும் வருத்தம் உள்ளது. இத்தகைய நபர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில், மனிதர்களின் கனவுகளை தூண்டக்கூடிய கருவி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ”ஐ பேண்ட் பிளஸ்” என பெயரிடப்பட்டுள்ள இந்த கருவியை, தலையில் அணிந்து கொள்ளலாம். இந்த கருவியுடன் எல்.இ.டி விளக்குகளும், சிறிய ஒலி பெருக்கிகளும் பொருத்தப்பட்டிருக்கும்.

உங்கள் மூளையிலிருந்து வெளியாகும் அலைகளை துல்லியமாக கணிக்கும் இந்த கருவியில் உடல்நிலையை கண்காணிக்கும் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளது. இவை உங்கள் உடல் இயக்கம் , உடல் வெப்பம் மற்றும் இதயத் துடிப்பு ஆகியவற்றை கணக்கிடும்.

நீங்கள் தூக்கத்தில் இருக்கும் நேரம் முழுவதும் இந்த கணக்கீடுகளை ஆராய்ந்து, அதனை கொண்டு ஒலி-காட்சி அலைகளை உருவாக்கும் இந்த கருவி,கனவுகளை தூண்டுகிறது. இந்த கருவியில் உள்ள எல்.இ.டி விளக்குகள் மற்றும் ஒலி மூலம் இந்த தூண்டலானது செய்யப்படுகிறது.

மனிதன் உறங்கும் போது விரைவான கண் இயக்கம் மற்றும் விரைவற்ற கண் இயக்கம் என இரண்டு நிலைகள் உண்டு. விரைவு கண் இயக்க நிலையே ஆழ்ந்த உறக்கம் எனப்படுகிறது. இந்த நிலையில் நமது உடல் தசைகள் மற்றும் கால்கள் தற்காலிகமாக இயங்காது.

இந்த நிலையை உணரும் ஐ பேண்ட் ,அந்த நேரத்தில் உங்களின் கனவுகளை தூண்டும். இதனால் நீங்கள் தூக்கத்திலிருந்து எழுந்திருக்காமல், அந்த கனவில் நடமாட முடியும். ஏதோ நிகழ்காலத்தில் நடந்தது போலவே அந்த கனவுகள் இருக்கும்.

இந்த ஐ பேண்ட் பிளஸ் கருவியானது தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை 312 அமெரிக்க டாலர்களாகும்.

நன்றி:http://www.dailymail.co.uk/sciencetech/article-3824800/The-real-life-Inception-245-headband-claims-able-control-DREAMS-fulfill-fantasy.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *