BREAKING NEWS:-
Search

கணினி மூலம் தோல் புற்றுநோயை கண்டறியலாம்..!

கணினி மூலம் தோல் புற்றுநோயை கண்டறியும் புதிய தொழில்நுட்பத்தை ஐ.பி.எம் நிறுவத்தின் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த தொழில்நுட்பம் மூலம் தேர்ந்த தோல் மருத்துவர்களை விட துல்லியமாக தோல் புற்றுநோயை கண்டறிய முடியுமாம். தற்போது ஆரம்ப கட்ட ஆராய்ச்சியில் உள்ள இந்த தொழில்நுட்பத்தை, இன்னும் பல கட்ட சோதனைகளுக்கு உட்படுத்த இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தோலில் ஏற்படும் புண்களை இதற்கென வடிவமைக்கப்பட்ட குறுஞ்செயலி வாயிலாக புகைப்படம் எடுக்க வேண்டும். இந்த புகைப்படங்கள் கணினியில் உள்ளீடு செய்யப்பட்டவுடன், ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள பல்வேறு தோல் புற்றுநோய் குறித்த புகைப்படங்களுடம் ஒப்பிட்டு பார்த்து முடிவு அறிவிக்கப்படும்.

8 தோல் நோய் நிபுணர்கள் 70 சதவீதம் துல்லியமாக தோல் புற்றுநோயை கண்டறிந்தால், இந்த கணினி 76 சதவீதம் வரை தோல் புற்றுநோயை கண்டறிவதாக இதன் மேல் நடத்தப்பட்ட சோதனைகளின் முடிவில் தெரியவந்துள்ளது. ’டெர்மா ஸ்கோப்’ என்ற இந்த தொழில்நுட்பத்திற்கு, எதிர்காலத்தில் 100 டாலர் முதல் 1400 டாலர்கள் வரை விலை நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் வகையில் இந்த தொழில்நுட்பமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இந்த தொழில்நுட்பம் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் எனவும் ஐ.பி.எம் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி:http://money.cnn.com/2016/11/14/technology/ibm-skin-cancer-smartphone/index.html?iid=SF_LN

விளம்பரம்

“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்
கிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் “இலவச இணையதள இடம்”

ஆம்,
“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”

மேலும் விபரங்களுக்கு
https://cloudsindia.in/
Mobile No : 9943094945

நேரடியாக பதிவு செய்ய
https://goo.gl/w5HlKV

இந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்..




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *