BREAKING NEWS:-
Search

கடல் மட்ட உயர்வால் 2100-ல் அமெரிக்காவில் பாதிப்பு

தற்போது ஏற்பட்டிருக்கும் காலநிலை மாற்றத்தால் அமெரிக்காவின் கடல் மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் வரும் 2100-ல் சுமார் 13.1 மில்லியன் மக்கள் பாதிப்படைவார்கள் என்று தகவலறிக்கை கூறுகிறது.

கடல் மட்ட உயர்வால் கடல் நீர் மக்கள் வசிக்கும் இடங்களை தன்வசப்படுதிக்கொள்ளும் இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அதிக அளவு பாதிப்படையும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதிகள் அதிக அளவு பாதிப்படையும். இதனால் அங்கு வசிக்கும் சுமார் 9.17 மில்லியன் மக்கள் பாதிப்படைவார்கள் மற்றும் புளோரிடா பகுதியில் மட்டும் 6.55 மில்லியன் மக்கள் பாதிப்படைவார்கள்.

இந்த பாதிப்புகள் அனைத்தும் மோசமான காலநிலை மாற்றத்தாலே நிகழ்கிறது. இதனால் அப்பகுதிகளை கடல் நீர் வந்து சூழ்ந்துக்கொள்ளும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கடந்த பத்து ஆண்டுகளாக கடல் மட்டம் உயர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இந்த நுற்றாண்டின் இறுதிக்குள் பெரும்பாலான மக்கள் இடம்   பெயருவார்கள் என்று தகவலறிக்கை கூறுகிறது. அமெரிக்காவில் ஏற்கனவே கடல் மட்ட உயர்விலிருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

http://www.popsci.com/131-million-americans-could-be-impacted-by-sea-level-rise

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *