BREAKING NEWS:-
Search

ஒன்பது சதவீத ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப உள்ள டிவிட்டர்..!

சமூக வலைத்தளங்களில் முண்ணனி நிறுவனமாக விளங்கினாலும், தொடர்ந்து டிவிட்டர் நிறுவனம் இழப்பை சந்தித்து வருகிறது. இதனால் தனது நிறுவனத்தை விற்கக் கூட சில முயற்சிகளை எடுத்து வந்தது. ஆனால் ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை.

இந்நிலையில் 2016-ஆம் ஆண்டிற்கான மூன்றாம் காலாண்டு முடிவில் அந்நிறுவனத்தின் வருவாய் மீண்டும் சரிவடைந்துள்ளதால், தனது ஊழியர்களின் ஒன்பது சதவீதத்தினரை வேலையை விட்டு நீக்க அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது. ஆனால் வேலையிழக்கும் ஊழியர்களுக்கு எந்த வகையிலான பணப்பலன்களை அளிக்கப்படும் என்பது குறித்து எந்த தகவலையும் டிவிட்டர் வெளியிடவில்லை.

டிவிட்டர் நிறுவனம் தனது பக்கத்திற்கு புதிய பயனாளர்களை ஈர்ப்பதில் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது. மேலும் அதன் போட்டி நிறுவனங்களான ஸ்னாப் சாட் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றுடன் போட்டியிடுவதிலும் டிவிட்டர் தொய்வடைந்துள்ளது.

கடந்த காலாண்டை விட இந்த காலாண்டு டிவிட்டரை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 3 மில்லியன் அதிகரித்திருந்தாலும், தொடர்ச்சியாக டிவிட்டர் பயன்படுத்தும் பயனாளர்கள் குறைவாக இருப்பதால் வருவாய் ஈட்டுவதில் அந்த நிறுவனம் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது.

நன்றி:http://zeenews.india.com/technology/twitter-cuts-9-of-staff-works-on-new-growth-strategy_1944241.html

மேலும்    செய்திகளுக்கு

 

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *