BREAKING NEWS:-
Search

ஏறு தழுவலுக்காக ஒன்று திரண்ட லண்டன் தமிழர்கள்..

ஏறுதழுவலுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் நடந்து வரும் போராட்டங்களுக்கு ஆதரவாக உலகமெங்கும் உள்ள தமிழர்கள் தங்கள் நாடுகளிலேயே போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர். அதில் முன்னெடுப்பாக லண்டனில் உள்ள தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடி இந்தியத் தூதரகம் முன்பு முழக்கப் போராட்டம் நடத்தினர்.

தடை அதை உடை, மோதாதே மோதாதே தமிழகத்துடன் மோதாதே, ஜல்லிக்கட்டு தடையை நீக்கு பாரம்பரியத்தைத் தூக்கி நிறுத்து, தமிழா தமிழா ஒன்றுபடு வெற்றி வரும் வரை போராடு.. என்ற வாசகங்களுடன் இலண்டன் இந்தியத் தூதரகத்தையே அதிர வைத்தனர்.

லண்டன் நேரப்படி 17ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் திரளான இந்தியர்கள் கூடி உணர்ச்சிப் பெருக்குடன் முழக்கமிட்டனர். பீட்டாவைக் கண்டித்தும், தமிழகத்துடன் மோதாதே என்று எச்சரித்தும் அனைவரும் முழக்கமிட்டனர்.

கோரிக்கை மனு

london2

முழக்கப் போராட்டத்தின் இறுதியில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி தூதரகத்தில் மனு ஒன்றும் அளிக்கப்பட்டது. தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் கூடி நடத்திய இந்தப் போராட்டம் அப்பகுதியினரின் கவனத்தை பெருமளவில் ஈர்த்தது.

உலகம் முழுவதும் போராட்டம்

தமிழகத்தில் மட்டும் ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டங்கள் நடக்கவில்லை. மாறாக பல்வேறு நாடுகளிலும் தமிழர்கள் திரண்டு அமைதி வழியில் பல்வேறு வகையான போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் தாண்டி இருந்தாலும் நமது பாரம்பர்யத்தை காப்பாற்ற, ஒன்று திரண்டு போராடும் இவர்களது முயற்சி பாராட்டத்தக்கது..!

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *