BREAKING NEWS:-
Search

எலக்ட்ரிக் காரை சார்ஜ் செய்யும் சாலை

எலக்ட்ரிக் கார் சார்ஜ் இருந்தால் மட்டும் ஓடும். சார்ஜ் இல்லையென்றால்  எலக்ட்ரிக் கார் எங்கு வேண்டுமானாலும் நின்று விடும். மேலும் இந்த காரை சார்ஜ் செய்ய அடிக்கடி நிறுத்துதல் வேண்டும். அதனால் ஓட்டுபவர்களுக்கு மிகவும் சிரமத்தை ஏற்படுத்தும்.  ஓட்டுபவர்களுக்கு உதவும் வகையில் கார்களை சார்ஜ் செய்யும் சாலையை பொறியாளர்கள் அமைத்துள்ளனர்.

7 (1)

புதிய சாலை தொழில்நுட்பத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் சோதனையை செய்ய தயாராக உள்ளது. பொதுவாக எலக்ட்ரிக் காரை  வீட்டில் அல்லது தெருக்களில் நிறுத்தும் போது  சார்ஜர் மூலமாகத்தான் சார்ஜ் செய்ய முடியும். ஆனால் தற்போது  இங்கிலாந்து அரசாங்கத்தின் ஒத்துழைப்போடு புதிய சார்ஜ் சாலையை அமைத்து வருகிறார்கள். காந்த தூண்டல் தொழில்நுட்பத்தை ( magnetic induction technology) பயன்படுத்தி  இந்த சாலையை அமைக்கிறார்கள்.

8

சோதனை செய்யப்பட்ட பிறகு பொறியாளர்கள் வயர்லெஸ் தொழில்நுட்பத்தை வாகனங்களுள் பொருத்துகிறார்கள். பிறகு சாலையின் கீழ் புறத்திலும் சிறப்பு உபகரணங்களை பொருத்துகிறார்கள்.

5 6 (1)

நெடுஞ்சாலையின்  அடியில் புதைக்கப்பட்ட கேபிள்கள் மின்காந்த புலனை உருவாக்கும் . பின்பு அது ரீசிவர் மூலம் ஈர்க்கப்பட்டு மின்சாரமாக மாற்றி காருக்கு  சார்ஜை அளிக்கிறது. இந்த அமைப்பில் தகவல் தொடர்பு முறையும் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் கார் வருவதை தெரிந்துக் கொண்டு அந்த சாலை தன்னுடைய செயல்முறையை  செய்ய தொடங்கிவிடும் என்று பொறியாளர்கள் கூறுகிறார்கள்.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *