BREAKING NEWS:-
Search

எதிர்பார்த்ததைவிட அதிக வெப்பமயமாதல்

Linkoping University ஆராய்ச்சியார்ளர்கள் புவி வெப்பமயமாதலை பற்றி ஆய்வு செய்ததில் தற்போது உலகம் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக வெப்பமயமாகிறது என்பதை கண்டறிந்துள்ளனர். இதற்கு காரணம் பசுமை இல்ல வாயுவில் எற்பட்ட அதிகப்படியான வெப்பநிலையே காரணம். தற்போது ஆராய்ச்சியாளர்கள் மீத்தேன் மாசு பற்றிய ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர்.

புவி வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணம் மனிதர்களின் செயல்களினால் ஏற்படும் பாதிப்பே ஆகும். அதிகப்படியான மீத்தேன் வாயு மாசுபடு புவி வெப்பமயமாதல அதிகரிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வினை பார்க்கும்போது தற்போது புவி மிக அதிகமாக வெப்பமாகி வருகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தற்போது விஞ்ஞானிகள் கண்டறிந்த ஆய்வின்படி மூன்று ஏரிகளிலிருந்து மீத்தேன் வாயு மாசுபாடு அதிகரித்துள்ளதாக கூறி உள்ளனர். தற்போது வெப்பமயமாதலில் 15 முதல் 200 செல்சியஸ் அதிகரித்துள்ளது.

தற்போதைய ஆய்வின்படி உலகில் அதிக படியான படிம எரிபொருட்களை எரிப்பதால் ஆர்த்ரோபோஜெனிக் உமிழ்வு அதிகரித்து காலநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிகிறது. இவ்வாறு காலநிலை மாற்றம் விரைவாக ஏற்படுவதால் உலகம் தற்போது மிக அதிக வேகத்தில் வெப்பம் அடைந்து கொண்டே இருக்கிறது என்று டேவிட் பாஸ்ட்விக்கன் கூறியுள்ளார்.

புவி வெப்பமயமாக மாறிவருவதால் உலக காடுகளில் மரங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் எதிர்காலத்தில் நல்ல பச்சை மரங்கள் நம் சந்ததியினர் பார்க்க முடியாத நிலை கூட ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

http://www.sciencedaily.com/releases/2015/11/151126104037.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *