BREAKING NEWS:-
Search

எதிர்காலத்தில் விண்வெளி நிலையம் கொண்ட ஒரே நாடு சீனாதான்..!

விண்வெளித்துறையில் சிறந்து விளங்கக்கூடிய சர்வதேச நாடுகளின் பங்களிப்போடு பூமிக்கு வெளியே விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இந்த விண்வெளி நிலையத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து, விண்வெளி குறித்த பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ள இந்த விண்வெளி நிலையம், வரும் 2024-ஆம் ஆண்டோடு ஓய்வு பெற உள்ளது.

இந்நிலையில் தனது நாட்டிற்கென பிரத்யேக விண்வெளி நிலையம் ஒன்றை சீனா நிறுவ உள்ளது. வரும் 2022-ஆம் ஆண்டு ”லாங் மார்ச்- 5” என பெயரிடப்பட்ட அதிக எடையை சுமந்து செல்லும் ராக்கெட்டின் உதவியால், விண்வெளி நிலையத்தை அமைக்க தேவையான பொருட்கள் புவி சுற்றுவட்டப் பாதைக்கு கொண்டு செல்லப்பட உள்ளன. சுமார் 20 டன் எடையுள்ள பொருட்களை இந்த ராக்கெட் சுமந்து செல்ல உள்ளது.

இந்த திட்டம் வெற்றியடைந்தால் 2024-ஆம் ஆண்டிற்கு பிறகு விண்வெளி நிலையம் கொண்ட ஒரே நாடு என்ற பெருமையை சீனா பெறும். இந்த விண்வெளி நிலையமானது இரண்டு ஆராய்ச்சிக் கூடங்களையும், பல விண்வெளிக்கலங்கள் தரையிறங்கக் கூடிய வசதியையும் கொண்டிருக்கும்.

விண்வெளி நிலையம் அமைக்கப்பட்ட பிறகு, அதற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் ஆண்டுக்கு ஒரு முறை விண்கலன்கள் மூலமாக கொண்டு செல்லப்படும். பூமியிலிருந்து 400 கி.மீட்டர் தொலைவில், புவியின் வட்டப்பாதையில் அமைக்கப்பட உள்ள இந்த விண்வெளி நிலையத்தின் ஆயுட்காலம் பத்து ஆண்டுகளாக இருக்கும்.

கடந்த சில வருடங்களாக அமெரிக்கா, ரஷ்யா நாடுகளைப் போல விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம் செலுத்தி வரும் சீனா, இதற்கென அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

நன்றி:http://zeenews.india.com/space/china-may-be-only-country-with-space-station-in-2024_1937854.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *