BREAKING NEWS:-
Search

உலகில் 200 ஆண்டுகளுக்கு முன் இல்லாத அளவு ஏழை மக்களா!

உலக அளவில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களை பற்றி தற்போது தகவலறிக்கை தயார் செய்யப்பட்டது. அந்த தகவலில் அதிர்ச்சி தரும் செய்தி இடம் பெற்றிருந்தது. என்னவென்றால் இன்றளவு உலகில் ஒரு மில்லியன் மக்களுக்கு மேல் ஒரு நாள் கூட உண்ண உணவு இல்லாமல் வறுமையில் உள்ளனர் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிக்கையை பார்த்ததும் ஐக்கிய நாடுகள் சபை அந்த ஏழ்மை மக்களின் வறுமையை வரும் 15 ஆண்டுகளுக்குள் குறைப்பதையே தன்னுடைய முக்கிய குறிக்கோளாகும் என்று கூறியுள்ளது.

1

இந்த வாரத்தின் முடிவில் 150 உலக நாடுகளின் தலைவர்களை ஐக்கிய நாடுகள் சபை சந்திக்க உள்ளதாகவும், அப்போது அவர்களிடம் உலகில் ஏழ்மையில் உள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை எப்படி உயர்த்துவது என்பதை பற்றியும் உரையாட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *