BREAKING NEWS:-
Search

இளைஞர்களுக்கான முகநூலில் புதிய குறுஞ்செயலி..!

சில மாதங்களுக்கு முன்னர் பதின்பருவத்தில் உள்ள மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் ஐ.ஓ.எஸ் இயங்குதள திறன்பேசிகளுக்காக ”லைப் ஸ்டேஜ்” என்ற சமூகவலைத்தள குறுஞ்செயலியை முகநூல் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த குறுஞ்செயலி ஐ.ஓ.எஸ் இயங்குதளங்களில் சிறப்பாக செயல்பட்டதால், தற்போது ஆன்ட்ராய்டு பதிப்பிற்கான “லைப் ஸ்டேஜ்” குறுஞ்செயலியை முகநூல் வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்து இந்த குறுஞ்செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள வீடியோ டைரி என்ற வசதி மூலம், ஏதாவது ஒரு கேள்விக்கு நீங்கள் வீடியோ வாயிலாக விளக்கம் அளித்து, லைப் ஸ்டேஜில் உள்ள உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம்.

கிட்டத்தட்ட ஸ்னாப் சாட் குறுஞ்செயலிக்கு போட்டி அளிக்கும் வகையில் விரைவாக சிறிய வீடியோக்களை உருவாக்குதல், வித்தியாசமான எமோஜிகள் போன்ற வசதிகள் லைப் ஸ்டேஜ் குறுஞ்செயலியில் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த குறுஞ்செயலியில் உங்களுடைய தனிப்பட்ட விபரங்களை நிரப்ப வேண்டுமெனில், அதனை வீடியோ பதிவாகத்தான் சொல்ல முடியும். எடுத்துக்காட்டுக்கு, உங்களுக்கு பிடித்த இசையமைப்பாளர் இளையராஜா என்றால், நீங்கள் இளையராஜா என வீடியோ பதிவில் கூறி அதனை பதிவேற்றம் செய்ய வேண்டி இருக்கும்.

இந்த வீடியோ பதிவுகளை உங்கள் நண்பர்கள் பார்த்து, அதனை பகிர முடியும். தொழில்நுட்பரீதியாக லைப் ஸ்டேஜ் குறுஞ்செயலில் 21 வயது மற்றும் அதற்கு கீழ் உள்ள பதின்பருவத்தினர் மட்டுமே பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

நன்றி:http://zeenews.india.com/technology/facebooks-teenager-only-app-now-available-for-android_1944509.html

 

மேலும் செய்திகளுக்கு

 

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *