BREAKING NEWS:-
Search

இரவு நேரப்பணியால் மார்பக புற்று நோய் வராது-ஆய்வில் தகவல்..!

இரவு நேர பணிகளில் தொடர்ந்து பெண்கள் ஈடுபட்டால் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் என உலக சுகாதார நிறுவனம் கடந்த 2007-ஆம் ஆண்டு தெரிவித்திருந்தது. பெண்கள் மற்றும் விலங்குகள் மீது எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகளின் படி இந்த கருத்தானது தெரிவிக்கப்பட்டது. மனித உடலியற் கடிகாரத்தில் ஏற்படும் தலைகீழ் மாற்றமே இதற்கு காரணம் எனவும் அப்போது தெரிவிக்கப்பட்டது.

ஆனால் பல ஆண்டுகளுக்கு பிறகு இதே தலைப்பில் ஆய்வை மேற்கொண்ட பிரிட்டன் விஞ்ஞானிகள், உலக சுகாதார நிறுவனத்தின் கருத்தை மறுத்துள்ளனர். இரவு நேரங்களில் பணியாற்றக்கூடிய 1.4 மில்லியன் பெண்களிடம் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, இரவு நேரங்களில் பணிபுரிவதால் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆய்வு எடுக்கப்பட்ட பெண்களில் கணிசமானோர் கடந்த 30 ஆண்டுகளாக இரவுப்பணிகளில் ஈடுபடுபவர்களாவர்.

2007-ஆம் ஆண்டின் போது மார்பகப் புற்றுநோய் குறித்த தெளிவான மருத்துவ முடிவுகள் நம்மிடையே இல்லை எனவும் அதனால்தான் அப்போது தவறான ஆய்வு முடிவுகள் பெறப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பிரிட்டனில் உள்ள பெண்களில் 14 சதவீதம் பேர் இரவுப்பணிகளில் ஈடுபடுகின்றனர். இவர்களில் 2 சதவீதம் பேர் 20 ஆண்டுகளுக்கு மேலாக இரவுப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பெண்களை அதிக அளவு தாக்கும் மார்பகப் புற்றுநோய்களை தடுக்க வேண்டுமெனில், பெண்கள் தங்கள் எடையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும், சுறுசுறுப்பாக இருக்க வேண்டும், ஆல்கஹாலை குறைந்த அளவே எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி:http://www.bbc.com/news/health-37574568

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *