BREAKING NEWS:-
Search

இனி பயணம் செய்யும் போது போக்கிமான் கோ விளையாட முடியாது..!

சமீபத்தில் வெளியிடப்பட்ட போக்கிமான் கோ வீடியோ கேம், திறன்பேசி உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்திவிட்டது என கூறலாம். சோனி பிளே ஸ்டேஷன் கருவிக்கு பிறகு, அதிக வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்படும் வீடியோ கேம் என்ற சாதனையையும் இந்த விளையாட்டு படைத்துள்ளது.

ஆனால் இந்த வீடியோ கேமை திறந்த வெளிகளில் விளையாட வேண்டி இருப்பதால், பலருக்கு விபத்துகள் நேரிட்டுள்ளன. இதனால் சில நாடுகளில் உள்ள பூங்காக்களில் போக்கிமான் கோ விளையாட தடை கூட விதிக்கப்பட்டது. இந்நிலையில் போக்கிமான் கோவின் மேம்படுத்தப்பட்ட வடிவத்தில் பயனாளர்களின் பாதுகாப்பிற்காக ஒரு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி இனி வாகனத்தை ஓட்டிக்கொண்டே போக்கிமான் கோ விளையாட முடியாது. வீடியோ கேம் விளையாடுபவர் மணிக்கு 30 கி.மீட்டர் வேகத்திற்கு மேல் சென்றால், போக்கிமான் கோ இயங்காது. போக்கிமான் கோ விளையாட்டு ஜி.பி.எஸ் கருவி மூலம் செயல்படுவதால், இந்த புதிய வசதி சாத்தியப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த கட்டுப்பாடு வாகனத்தை இயக்காமல், அதற்கு பின்னால் உட்கார்ந்து பயணிப்பவர்களுக்கும் பொருந்துமா? என்பதை போக்கிமான் கோ தயாரிப்பாளர்கள் தெரிவிக்கவில்லை. எனவே இது குறித்து விளக்கம் கேட்டு, அந்நிறுவனத்திற்கு பலர் கடிதம் எழுதி வருகின்றனர்.

நன்றி:http://tech.firstpost.com/news-analysis/new-pokemon-go-update-restricts-game-features-while-driving-342170.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *