BREAKING NEWS:-
Search

இனி ஆண்ட்ராய்டு மற்றும் குரோமில் கூகுள் எர்த்தை பயன்படுத்தலாம்..!

கூகுள் நிறுவனத்தின் ‘கூகுள் எர்த்’ சேவை, பல்வேறு புதிய வசதிகளுடன் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய வசதிகளையும், வடிவமைப்புகளையும் ஏற்படுத்த அந்த நிறுவனத்திற்கு 2 ஆண்டுகள் பிடித்துள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள கூகுள் எர்த் வசதியை, ஆண்ட்ராய்டு மற்றும் குரோமில் பார்க்க முடியும்.

”வாயேஜர்” என அழைக்கப்படும் புதிய வசதி மூலம், சுற்றுலாவுக்கு செல்லக் கூடியவர்கள், கூகுள் எர்த்தில் பல்வேறு ஆலோசனைகள், உதவிகளை பெற முடியும். ”திஸ் இஸ் ஹோம்” என்ற வசதி மூலம், உலகம் முழுவதும் உள்ள பாரம்பரிய வீடுகளையும், அவற்றின் கட்டமைப்புகளையும் பார்க்க முடியும். இந்த வசதிக்காக பிபிசி மற்றும் சீசேம் ஸ்ட்ரீட் ஆகிய நிறுவனங்களுடன் கூகுள் எர்த் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் மேலும் பல நிறுவனங்கள் இணைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு இடம் குறித்து நீங்கள் கூகுள் எர்த்தில் தேடும் போது, அந்த இடம் குறித்த முக்கிய தகவல்களையும் பெற முடியும். இதற்கு “நாலெட்ஜ் கார்டு” என பெயரிடப்பட்டுள்ளது. கூகுள் உலாவியில் இருப்பது போல, ’நான் அதிர்ஷ்டமாக உணர்கிறேன்’ என்ற வசதியும் கூகுள் எர்த்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட கூகுள் எர்த்தின் புதிய பதிப்பு, தற்போது செயல்பாட்டில் உள்ளது. இந்த வசதிகளை இன்று முதல் ஆண்ட்ராய்டு மற்றும் கூகுள் குரோம் உலாவியை பயன்படுத்தும் பயனாளர்கள் பெற முடியும். அடுத்த சில மாதங்களில் ஐ.ஓ.எஸ் இயங்குதளத்திலும் இந்த வசதிகள் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:

http://indianexpress.com/article/technology/tech-news-technology/google-earth-gets-voyager-guided-tours-and-3d-views-now-available-for-android-and-chrome/




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *