BREAKING NEWS:-
Search

இனி அமெரிக்காவில் மெசெஞ்சர் மூலமாக வாக்காளர் பட்டியலில் இணையலாம்..!

அமெரிக்க அதிபருக்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. மற்ற நாடுகளைப் போல் இல்லாமல், அமெரிக்காவில் ஓட்டளிக்கும் முறைகள் மிண்ணனுமயமானவை. எனவே அமெரிக்க தேர்தலின் ஒவ்வொரு நடைமுறையும், கணினி வழியாகவே செய்யப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்க தேர்தலில் ஓட்டளிக்க விரும்பும் அமெரிக்க குடிமகன்கள், தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திருக்க வேண்டும். பட்டியலில் பெயர் இல்லை என்றால் ஓட்டளிக்க முடியாது. ஆனால் இனி அமெரிக்க வாக்களர்கள் பயப்படத் தேவையில்லை. முகநூல் மெசஞ்செர் வசதியை கொண்டிருப்பவர்கள், அதன் வழியாகவே வாக்காளர் பட்டியலில் தங்களை இணைத்துக் கொள்ளலாம்.

அமெரிக்காவைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான ஆட் கவுன்சில் என்ற அமைப்பு, ”கோ வோட் பாட்” என்ற வசதியை உருவாக்கி, அதனை முகநூல் மெசெஞ்சருடன் இணைத்துள்ளது. இதன் மூலம் மெசெஞ்சர் இணைப்பு உள்ளவர்கள், எளிதாக தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்வது மட்டுமின்றி, வாக்குச்சாவடி, வேட்பாளர் என பல்வேறு தேர்தல் குறித்த தகவல்களையும் அறிந்து கொள்ளலாம்.

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதிக்கு அமெரிக்க இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறதாம்.

நன்றி:http://tech.firstpost.com/news-analysis/us-citizens-can-now-register-to-vote-through-facebook-messenger-339807.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *