BREAKING NEWS:-
Search

”இந்தியா குறித்த அவதூறு கருத்து”: ஸ்நாப்சாட்டின் பங்குகள் சரிந்தன..!

”இந்தியா மற்றும் ஸ்பெயின் போன்ற ஏழை நாடுகளில் தொழிலை விரிவுபடுத்த விரும்பவில்லை.” என ஸ்நாப்சாட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கருத்து தெரிவித்திருந்த கருத்துக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஸ்நாப்சாட் நிறுவனத்தை எதிர்த்து மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்தால், கணிசமான அளவு ஸ்நாப்சாட்டின் இந்திய வாடிக்கையாளர்கள், தங்கள் திறன் பேசியிலிருந்து அந்நிறுவன குறுஞ்செயலியை நீக்கினர். மேலும் பலர் கூகுள் பிளே ஸ்டோரில், ஸ்நாப்சாட் குறுஞ்செயலியின் மதிப்பை ஐந்து நட்சத்திரங்களில் இருந்து 1 நட்சத்திரமாக குறைத்தனர்.

இந்தியர்களின் இந்த எதிர்ப்பு, ஸ்நாப் சாட்டின் பங்குகளிலும் எதிரொலித்துள்ளது. நேற்று மாலை முடிந்த பங்குச் சந்தை நிலவரப்படி, ஸ்நாப் சாட் நிறுவனத்தின் பங்குகள் 1.5 சதவீதம் சரிந்துள்ளது. இதனால் அந்த நிறுவனம் கடும் அதிர்ச்சியில் உள்ளது. “ஸ்நாப்சாட் நிறுவனம் அனைவருக்குமானது. இந்தியாவில் ஸ்நாப் சாட் பயன்படுத்தப்படுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.” என ஸ்நாப்சாட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்நாப்சாட் நிறுவனமானது, முகநூல், என்னாப்பிற்கு பிறகு வளர்ந்து வரும் ஒரு சமூக வலைத்தளமாக பார்க்கப்படுகிறது. இந்நிறுவனத்தின் பெரும்பாலான பயனாளர்கள், 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களாவர்.

நன்றி:

http://indianexpress.com/article/technology/tech-news-technology/snap-stock-falls-after-social-media-anger-over-ceos-alleged-anti-india-comment/




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *