BREAKING NEWS:-
Search

இந்தியாவில் மின்னணு பணப்பரிமாற்றம் 23 மடங்கு அதிகரித்துள்ளது: நிதி ஆயோக் தகவல்..!

பண மதிப்பிழப்பு நடவடிக்கை துவங்கிய நாளிலிருந்து கடந்த மார்ச் மாதம் வரை, இந்தியாவில் மின்னணு பணப்பரிமாற்றம் 23 மடங்கு அதிகரித்துள்ளதாக நிதி ஆயோக் அமைப்பு தெரிவித்துள்ளது. 2,245 கோடி மதிப்புள்ள சுமார் 64 லட்சம் மின்னணு பணப்பரிமாற்றங்கள் இந்த காலகட்டத்தில் நடைபெற்றுள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட கடந்தாண்டு நவம்பர் மாதம் மட்டும், 101 கோடி ரூபாய் அளவுக்கு 2,80,000 மின்னணு பணப்பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளதாம். அதே சமயத்தில் ஆதார் அட்டை மூலம் நடைபெற்ற பணப்பரிமாற்றங்கள் 2.5 கோடியிலிருந்து 5 கோடியாக அதிகரித்துள்ளதாம்.

இந்த காலகட்டத்தில் உடனடியாக மின்னணு பணப்பரிமாற்றம் செய்யக்கூடிய ஐ.எம்.பி.எஸ் சேவை, 3.6 கோடியிலிருந்து 6.7 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும் இந்த ஆண்டு 2,500 கோடி ரூபாய் அளவுக்கு மின்னணு பணப்பரிமாற்றம் நடைபெறுவதற்கு, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

மேலும் அதிகளவு மின்னணு பணப்பரிமாற்றத்திற்கான முன் மாதிரியாக, 75 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன. இந்த நகரங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 1.5 லட்சம் மின்னணு பணப்பரிவர்த்தனைகளை நடத்திக் காட்டவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நன்றி:

http://tech.firstpost.com/news-analysis/niti-aayog-states-that-digital-transactions-have-increased-23-fold-after-demonetisation-372165.html




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *