BREAKING NEWS:-
Search

இந்தியாவில் சோதனை முறையில் தொழிற்சாலை அமைக்க உள்ள ஆப்பிள்..!

பெங்களூரில் தனது நிறுவன திறன்பேசியை ஒருங்கிணைப்பதற்கான சோதனை முயற்சியை ஆப்பிள் நிறுவனம் எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபகாலமாக ஆப்பிள் உட்பட பல்வேறு வெளிநாட்டு செல்பேசி நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி மையங்கள் அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றன. ஆனால் இந்தியாவின் வரிவிதிப்பு அமைப்பில் இருக்கக் கூடிய சிக்கல், அந்த நிறுவனங்களுக்கு இந்தியாவில் கால் பதிக்க தயக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் ஆப்பிள் நிறுவன திறன்பேசியின் உதிரி பாகங்களை ஒருங்கிணைக்கும் தொழிற்சாலையை சோதனை முறையில் அமைக்க அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இந்த தொழிற்சாலையை, ஆப்பிள் நிறுவனத்திற்கான உற்பத்தி உபகரண வசதிகளை ஏற்படுத்தித் தரும் தைவான் நிறுவனம் உருவாக்க உள்ளது.

இந்த சோதனை முயற்சியை தொடர்ந்து, இந்தியாவில் தனது உதிரி பாகங்களை தயாரிக்கும் முழுமையான தொழிற்சாலையை ஆப்பிள் நிறுவும் என கர்நாடக மாநில அரசு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தனது சோதனை தொழிற்சாலையை இந்தியாவில் தொடங்குவதற்கு வரிச்சலுகை அளிக்க வேண்டும் என இந்திய அரசுக்கு ஆப்பிள் நிறுவனம் வேண்டுகோள் விடுத்திருந்தது. ஆனால் இதற்கு இந்திய அரசு மறுப்பு தெரிவித்துவிட்டது.

மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் இந்தியாவில் உற்பத்தியை துவங்க உள்ள சாம்சங், ஓப்போ மற்றும் ஜியோமி ஆகிய நிறுவனங்கள், இந்திய அரசிடம் பல்வேறு வரிச்சலுகைகளை பெற்றுள்ளன. ஆனால் ஆப்பிள் நிறுவனம் கேட்கும் வரிச்சலுகைகள், அதிகமாக இருப்பதால் இந்திய அரசு அதனை நிராகரித்துள்ளது.

ஆனால் தொடர்ந்து இந்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தனது பெங்களூரு தொழிற்சாலை திட்டத்திற்கு தேவையான வரிச்சலுகைகளை ஆப்பிள் நிறுவனம் பெறும் என கர்நாடக அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

நன்றி:

http://tech.firstpost.com/news-analysis/apple-will-start-trial-assembly-of-iphones-in-india-while-continuing-to-pursue-tax-sops-from-the-govt-372509.html




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *