BREAKING NEWS:-
Search

இந்தியாவில் அறிமுகமாக உள்ள உபேரின் புதிய சேவை..!

அமெரிக்காவின் முன்னணி கால் டாக்சி நிறுவனமான உபேர், இந்தியாவில் தனக்கென கணிசமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. வளர்ந்து வரும் முக்கிய சந்தையான இந்தியாவில் தனது வியாபாரத்தை அதிகரிக்க விரும்பும் உபேர், சமீபத்தில் உணவு பதிவு செய்வதற்கான குறுஞ்செயலியை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் அறிவித்திருந்தது.

இந்நிலையில் வியாபார நிறுவனங்களுக்கான பிரத்யேக கால் டாக்சி சேவையான, “உபேர் சென்ட்ரல்” சேவையை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது உபேர். இந்த புதிய சேவையின் படி, வாடிக்கையாளர்கள் என்பவர்கள் தனி நபர்களாக இல்லாமல், பெரிய நிறுவனங்களாக இருக்கும். எனவே அந்த நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள், தங்களுக்கென தனியாக உபேர் கணக்கு அல்லது திறன்பேசி வைத்திருக்க தேவையில்லை. வாடிக்கையாளர்கள் வேலை பார்க்கும் நிறுவனமே தங்கள் ஊழியர்களின் போக்குவரத்திற்காக உபேர் சென்ட்ரல் கணக்கு ஒன்றை துவங்கும்.

இதன் மூலம் அலுவலகத்திற்கு வருவதற்கும், போவதற்கும் ஆகும் கட்டணங்கள் உபேர் சென்ட்ரல் கணக்கில் சேர்ந்துவிடும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தற்போது ஐ.டி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிற்கு கொண்டு போய் விட, தனியார் வாகன நிறுவனங்களை ஒப்பந்தம் செய்திருக்கும். அது போன்ற ஒரு வடிவில்தான் இந்த உபேர் சென்ட்ரல் சேவை இயங்கும்.

”தற்போது உலகம் முழுவதும் உள்ள 65,000 நிறுவனங்கள், உபேர் சென்ட்ரல் சேவையின் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள்.” என உபேர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நன்றி:

http://tech.firstpost.com/news-analysis/uber-central-comes-to-india-provides-on-demand-door-to-door-transportation-for-businesses-372616.html




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *