BREAKING NEWS:-
Search

இந்தியாவிலேயே சிறந்த இணைய வசதியை பெற்றிருப்பது டெல்லி தானாம்..!

இந்தியாவிலேயே இணைய வசதிக்கான சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை பெற்றுள்ள மாநிலம் டெல்லிதான் என இந்திய இணையம் மற்றும் செல்பேசி அமைப்பு தெரிவித்துள்ளது. உள்கட்டமைப்பு மட்டுமல்லாது, இணைய பங்கேற்பு, இணையச் சூழல், அரசின் இணைய சேவைகள் ஆகியவற்றிலும் டெல்லி சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

சமீபத்தில் இந்த அமைப்பு, நீல்சன் நிறுவனத்துடன் இணைந்து “இந்தியாவில் சிறந்த இணைய வசதியை கொண்டுள்ள மாநிலம்” என்ற தலைப்பில் கருத்துக் கணிப்பு நடத்தியது. இதில் கர்நாடகா, தமிழ்நாடு ஆகியவற்றை பின்னுக்கு தள்ளி டெல்லி முதலிடம் பிடித்துள்ளது.

டெல்லிக்கு பிறகு சண்டிகர் மாநிலம் இரண்டாவது இடத்தையும், புதுச்சேரி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. இணைய வசதிகளில் உலகில் 155-வது இடத்தில் உள்ள இந்தியா, இன்னும் 5 ஆண்டுகளில் முதல் ஐந்து நாடுகளில் இடம்பெறும் என இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வட கிழக்கு மாநிலங்களில் நாகலாந்து முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை முறையே மணிப்பூர் மற்றும் திரிபுரா பெற்றுள்ளன. இணைய வழி வர்த்தகம் தொடர்பான புதிய நிறுவனங்கள் அதிகளவு துவங்கப்பட்ட மாநிலங்களில், கர்நாடகா, டெல்லி மற்றும் மகராஷ்டிரா ஆகியவை முதல் 3 இடங்களை பிடித்துள்ளன.

ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இணைய வசதிகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தொலைதொடர்புத்துறையில் உலகில் நம்பிக்கைக்கு உரிய வகையில் வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி:

http://tech.firstpost.com/news-analysis/delhi-is-the-most-internet-ready-state-in-india-says-iamai-report-372512.html




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *