BREAKING NEWS:-
Search

இந்தியாவின் 26 வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தகவல்கள் திருட்டு..!

ஹேக்கர்கள் உருவாக்கிய இணையதளம் மூலமாக இந்தியாவில் உள்ள 26 வங்கிகளின் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டிருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த “ஃபைர் ஐ” நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி இணையம் வழியாக பணம் செலுத்தும் தளமாக csecurepay[.]com என்ற இணையதளம் பதிவு செய்யப்பட்டுள்ளது.  ஆனால் இந்த இணையதளம் வழியாக பணம் செலுத்துபவர்களின் வங்கிக் கணக்குத் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக ஃபையர் ஐ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த இணையதளத்திற்குள் செல்பவர்களிடம் வங்கிக் கணக்கு எண், செல்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, ஒரு முறை கடவுச்சொல்(OTP) மற்றும் மற்ற தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன. இந்த தகவல்கள் அனைத்தும் தந்தவுடன், பணப்பரிமாற்றம் தோல்வி அடைந்துவிட்டதாகவும், மீண்டும் முயற்சிக்குமாறும் பதில் கிடைக்கிறது.

முக்கியமான இந்திய வங்கிகளான பாரத ஸ்டேட் வங்கி, ஹெ.டி.எஃப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஐ.டி.பி.ஐ வங்கி போன்ற 26 வங்கிகள் பாதிப்பிற்குள்ளாகி உள்ளன. இந்த இணையதளம் வழியாக பணம் செலுத்தச் செல்பவர், அதில் தங்களுடைய வங்கியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு இருக்கும். அதில் குறிப்பிட்ட வங்கியை தேர்ந்தெடுத்தவுடன், அந்த வங்கியின் பொய்யான இணையப் பக்கம் திறக்கும். வங்கியின் உண்மையான இணைய சேவைப் பக்கம் என நினைத்து வாடிக்கையாளர்கள் தங்கள் பயனாளர் எண் மற்றும் கடவுச்சொல்லை அளித்தவுடன், இணைப்பில் ஏதோ பாதிப்பு இருப்பதாகவும், பின்னர் முயற்சிக்கவும் என பதில் கிடைக்கும். ஆனால் அவர்கள் வங்கிக் கணக்கின் அனைத்து தகவல்களும் ஹேக்கர்கள் வசம் சென்றிருக்கும்.

அதிக அளவில் இணைய வங்கிச் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை பின் தொடரும் ஹேக்கர்கள், அவர்களை குறி வைத்து இது போன்ற மோசடிகளில் ஈடுபடுகின்றனர் csecurepay[.]com) இணையதளத்தை உருவாக்கிய ஹேக்கர், கடந்த ஆகஸ்ட் மாதம் nsecurepay[.]com என்ற இணையதளத்தையும் துவங்கியுள்ளான். அந்த இணையதளத்தின் மூலம், ஐ.சி.ஐ.சி.ஐ. சிட்டி வங்கி, விசா, மாஸ்டர் மற்றும் எஸ்.பி.ஐ கடன் அட்டைகளின் தகவல்களை திருடப்பட்டுள்ளது.

இந்த சைபர் தாக்குதல் குறித்த தகவல்களை இந்திய மிண்ணனு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு கீழ் இயங்கும் இந்திய கணினி அவசர நடவடிக்கை குழுவிடம் தெரிவித்துள்ளதாகவும் ஃபயர் ஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.

நன்றி:’http://tech.firstpost.com/news-analysis/malicious-websites-are-stealing-personal-information-from-26-indian-banks-says-fireeye-350978.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

விளம்பரம்

“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்
கிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் வழங்குகிறது “இலவச இணையதள இடம்”

ஆம்,
“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”

மேலும் விபரங்களுக்கு
https://cloudsindia.in/
Mobile No : 9943094945

நேரடியாக பதிவு செய்ய
https://goo.gl/w5HlKV

இந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்..




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *