BREAKING NEWS:-
Search

இதய நோயினை கண்டறிய மலிவு விலை இயந்திரம்

உலகில் இதயநோய் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள நாடுகளில் முதலிடத்தில் இந்தியா உள்ளது. இதுவரை கிட்டதட்ட 30 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதுவரை இந்த நோயினை துல்லியமாக கண்டறிய அதிக செலவாகிறது என்பதால் பல நபர்களுக்கு இதயநோய் இருப்பதே தெரிவதில்லை.

இந்த பிரச்சனையினை தீர்க்க தற்போது பாக்கெட் ஈசிஜி மானிட்டரை உருவாக்கியுள்ளனர். இது ATM அட்டை வடிவில் உள்ளது. இவை இதயநோயினை மிகத்துல்லியமாக கண்டுபிடிக்க உதவுகிறது. இந்த கருவி 98%  இதயநோயினை கண்டறிய பயன்படுகிறது. இந்த இயந்திரம் நம் கட்டை விரலை பயன்படுத்தி மிகத்துல்லியமாக மனஅழுத்த அளவுகளை தெளிவாக கணக்கிடுகிறது. இந்த இயந்திரம் மூலம் எடுக்கப்பட்ட ஈசிஜி உடனடியாக மொபைல் திரையில் காட்டப்படும்.

இச்சோதனை வெறும் 15 நொடிகளில் செய்ய முடியும். இந்த இயந்திரம் கிராமப்புற பகுதிகளில் வாழும் மக்களுக்கு மிக உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. யாருடைய உதவியும் இல்லாமல் நாமே மிக எளிமையாக இதனை பயன்படுத்த முடியும்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *