BREAKING NEWS:-
Search

இதயத்துடிப்பை கண்காணிக்கும் சிறிய கருவி கண்டுடிப்பு..!

அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மனிதனின் இதயத்துடிப்பு மற்றும் பேச்சைக் கண்காணிக்கும் மிகச்சிறிய உணர்வியை வடிவமைத்துள்ளனர். மனித உடலில் ஏற்படும் அதிர்வுகளை ஆராயும் இந்த கருவி, அதன் மூலம் இதயம் சீராக இயங்குகிறதா என்பதையும் தெரியப்படுத்தும். இது பார்க்க ஒரு பேண்ட் எயிட் தோற்றத்தில் இருக்கும். இதன் எடை ஒரு அவுன்சில் நூறில் ஒரு பங்கு மட்டுமே.

”இந்த கருவி மிகவும் குறைவான அடர்த்தி கொண்டது. இதனை இதயக் கண்காணிப்புக் கருவியாகவும் பயன்படுத்த முடியும். மேலும் மனிதர்கள் பேசுவதையும் இந்த கருவியால் உணர முடியும்.” என இதனை வடிவமைத்துள்ள ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மனித இதயத்தின் வால்வுகள் திறக்கும் போதும், மூடும் போதும் திசுக்கள் மற்றும் மனித உடலில் உள்ள திரவங்கள் வழியாக உருவாகும் இயந்திர அலைகளை இந்த கருவி கண்காணிக்கும். மேலும் மனிதனின் ஜீரண அமைப்பு மற்றும் குரல்வளையில் ஏற்படக்கூடிய அதிர்வுகளையும் இது உணரக் கூடிய தன்மையை கொண்டுள்ளது.

மனித தோலில் ஓட்டிக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கருவி, மனித உள் உறுப்புகளில் இருந்து உருவாகக்கூடிய சப்தத்தைக் கொண்டு, அந்த உறுப்பு ஆரோக்கியமாக இயங்குகிறதா என்பதை கண்காணிக்கும். குறிப்பாக இதயம் மற்றும் நுரையீரல் ஆகிய உறுப்புகளை மிகத் துல்லியமாக இந்த கருவி கண்காணிக்கும்.

இந்த கருவி மூலம் கணக்கெடுக்கப்படும் உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை நேரடியாக கணினியில் உள்ளீடு செய்ய முடியும். பல நாட்கள் தொடர்ந்து எடுக்கப்படும் இந்த தரவுகளை கணக்கிடும் போது, உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை மிக எளிதாக அறிந்து கொள்ள முடியும். இந்த உணர்விகளில் உள்ள தொழில்நுட்பம் மிக இரைச்சல் உள்ள குறிப்பாக போர்முனைகளில் கூட, மிகத் தெளிவாக உடல் உறுப்புகளிலிருந்து வெளியேறும் ஒலியை கண்காணிக்க வல்லது.

மேலும் மனிதன் பேசுவதை இந்த கருவி உணர்ந்து கொள்ளும் என்பதால், எதிர்காலத்தில் பேச்சுத்திறன் குறைபாடு உள்ளவர்கள், என்ன கூற வருகிறார்கள் என்பதைக் கூட அறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நன்றி:http://indianexpress.com/article/technology/gadgets/this-e-device-can-monitor-heart-recognise-speech-4380501/

விளம்பரம்

“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்
கிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் வழங்குகிறது “இலவச இணையதள இடம்”

ஆம்,
“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”

மேலும் விபரங்களுக்கு
https://cloudsindia.in/
Mobile No : 9943094945

நேரடியாக பதிவு செய்ய
https://goo.gl/w5HlKV

இந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்…




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *