BREAKING NEWS:-
Search

”ஆழ்ந்த தூக்கத்தை அளவிடும் உணர்வி” : ஜியோமி அறிமுகம்..!

சீனாவின் முன்னணி செல்பேசி உற்பத்தி நிறுவனமான ஜியோமி, இந்த முறை வித்தியாசமான முயற்சியில் இறங்கியுள்ளது. பல திறன்பேசிகளை அறிமுகப்படுத்தியுள்ள இந்த நிறுவனம், இந்த முறை கூட்டு முதலீடு மூலம் ஆழ்ந்த உறக்கத்தை அளவிடும் உணர்வி ஒன்றை உருவாக்கியுள்ளது.

”லூனா ஸ்மார்ட் சிலீப் சென்சார்” என பெயரிடப்பட்டுள்ள இந்த உணர்வி, சிறிய தட்டை வடிவில் அமைந்துள்ளது. இதன் விலை சுமார் 700 ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த உணர்வி, பயனாளர் எவ்வளவு ஆழமான உறங்குகிறார்? அது தரமான, தேவையான உறக்கமா? என்பதை அளவிட்டு, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அறிக்கையாக அளிக்கும். இந்த உணர்வி மூலம் அளவிடப்படும் அளவீடுகளை, அதற்கென இருக்கும் செல்பேசி குறுஞ்செயலியில் பார்த்துக் கொள்ள முடியும். வை-ஃபை இணைய வசதியுடன் இந்த குறுஞ்செயலியை இணைத்துவிட்டால், உங்கள் தூக்கத்தின் ஆழத்தை துல்லியமாக கணக்கிட்டு விடலாம். ஆன்ட்ராய்டு 4.0 மற்றும் அதற்கு அதிகமான மேம்பாடு உடைய இயங்குதளங்களிலும், ஐ.ஓ.எஸ் 8.0 மற்றும் அதற்கு அதிகமான மேம்பாடு உடைய இயங்குதளங்களிலும் இந்த குறுஞ்செயலியை பயன்படுத்தலாம்.

கூட்டு முதலீடு மூலம் ஜியோமி நிறுவனம் உருவாக்கியுள்ள 55-வது பொருள் இதுவாகும். இந்த உணர்வியின் பயனாளருக்கு உறக்கம் வரவில்லை எனில், அதில் உள்ள பொத்தானை அழுத்தினால், ஆழ்ந்த உறக்கத்திற்கான அறிவுரைகளை இந்த உணர்வி தெரிவிக்கும். மேலும் உறக்கத்தை தூண்டும் மென்மையான இசையையும் இசைக்கச் செய்யும்.

நீங்கள் தூங்கும்போது இந்த உணர்வியை உங்கள் தலையணைக்கு அடியிலோ அல்லது படுக்கைக்கு அடியிலோ வைக்க வேண்டும். இந்த உணர்வியிலிருந்து எந்த கதிர் வீச்சுகளும் வராது எனவும் அதனால் உடலுக்கு இந்த கருவியால் எந்த தீங்கும் இல்லை எனவும் ஜியோமி நிறுவனம் உறுதி அளித்துள்ளது. மின்காந்த அலைகளும் இதிலிருந்து வெளிவராதாம்.

ஒரு மணி நேரம் சார்ஜ் செய்தால் 90 நாட்கள் வரை இந்த உணர்வி செயல்படுமாம். இதிலுள்ள பேட்டரி 50 ஆயிரம் மணி நேரம் பயன்பாடு கொண்டது. அடுத்தாண்டு ஜனவரி 12-ஆம் தேதிக்கு பிறகு இந்த கருவியின் விற்பனை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இந்த கருவியை அறிமுகப்படுத்துவது குறித்து தற்போது வரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

நன்றி:http://tech.firstpost.com/news-analysis/xiaomi-launches-luna-smart-sleep-sensor-on-its-crowdfunding-app-to-sell-for-cny-69-350754.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

விளம்பரம்

“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்
கிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் வழங்குகிறது “இலவச இணையதள இடம்”

ஆம்,
“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”

மேலும் விபரங்களுக்கு
https://cloudsindia.in/
Mobile No : 9943094945

நேரடியாக பதிவு செய்ய
https://goo.gl/w5HlKV

இந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்..




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *