BREAKING NEWS:-
Search

ஆளில்லா விமானங்கள் மூலம் அளவிடப்படும் குர்கான் நகரம்..!

ஆரம்ப காலத்தில் உயரமான இடங்களிலிருந்து புகைப்படம் எடுக்க பயன்படுத்தப்பட்ட ஆளில்லா டிரான் விமானங்கள் இன்று பாதுகாப்பு, ஆராய்ச்சி, வர்த்தகம் என பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. டிரான் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புகள் உள்ளதால், இந்தியாவில் காவல்துறை அனுமதி பெற்ற பிறகே டிரான் விமானங்களை பயன்படுத்த முடியும்.

இந்நிலையில் ஹரியானா அரசு, மிக வேகமாக வளர்ந்து வரும் நகரமான குர்கானை டிரான் விமானங்கள் மூலம் அளவிட்டு வருகிறது. குர்கான் மட்டுமல்லாது டெல்லியிலுள்ள சாட்டிலைட் நகரம், வட இந்தியாவின் சோனா மற்றும் மனேசார் ஆகிய நகரங்களும் டிரான் விமானங்களினால் அளவிடப்பட உள்ளன.

தற்போது மாநில அரசுகளிடம் இருக்கக் கூடிய வரைபடத் தகவல்கள் பல ஆண்டுகளுக்கு முன்னர் கணக்கிடப்பட்டவை. அப்போது இருந்ததை விட பல மடங்கு தற்போது நகர்ப் பகுதிகள் வளர்ச்சியடைந்துள்ளன. எனவே காலத்திற்கேற்றவாறு வரைபடத்தில் மாற்றங்களை ஏற்படுத்த ஆளில்லா டிரான் விமானங்கள் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. மேலும் ஆக்கிரமிப்பு, நிலப் பிரச்சனைகளை கண்டறியவும் இந்த புகைப்படங்கள் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நில அளவுகள் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மேம்படுத்தப்படும். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக இவை சரியாக பின்பற்றப்படவில்லை. செயற்கைக்கோள் புகைப்படங்களை பயன்படுத்தினால் கூட தரவுகளில் தவறு ஏற்படுகிறது. எனவே டிரான் விமான புகைப்படங்களை பயன்படுத்தி நில அளவை பணிகளை துல்லியமாக மேற்கொண்டு வருகிறோம்.” என குர்கான் நகர அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் உள்ள அனைத்து நிலப்பரப்பின் துல்லியமான அளவுகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் ஒன்று தீட்டப்பட்டுள்ளது. இந்த திட்டமானது வரும் 2021-ஆம் ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக சுமார் 1.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட உள்ளது.
மற்ற நில அளவீட்டு முறைகளை விட டிரான் விமானங்கள் செலவு குறைவாக உள்ளன. அவை மூலம் எடுக்கப்படும் புகைப்படங்கள், செயற்கைக்கோள் புகைப்படங்களை விட தெளிவாக உள்ளன. டிரான் விமானங்கள் மூலம் எளிதாக இந்த திட்டத்தை நிறைவேற்றிவிட முடியும். ஆனால் இந்தியாவில் குறிப்பிட்ட பல பகுதிகளில் (ராணுவம், அரசு அலுவலகங்கள்) டிரான் விமானங்களை பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த திட்டத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

நன்றி:http://tech.firstpost.com/news-analysis/drones-are-mapping-indian-cities-where-they-are-permitted-to-operate-350429.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

விளம்பரம்

“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்
கிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் வழங்குகிறது “இலவச இணையதள இடம்”

ஆம்,
“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”

மேலும் விபரங்களுக்கு
https://cloudsindia.in/
Mobile No : 9943094945

நேரடியாக பதிவு செய்ய
https://goo.gl/w5HlKV

இந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்..




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *