BREAKING NEWS:-
Search

ஆறு வீடியோ கேம்களை அறிமுகப்படுத்த உள்ள சோனி நிறுவனம்..!

அடுத்த நிதியாண்டில் ஆறு திறன்பேசி விளையாட்டு கேம்களை அறிமுகப்படுத்த உள்ளதாக ஜப்பானின் பிரபல சோனி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய வெளியீடுகள் மூலம் நிண்டெண்டோ நிறுவனத்தின் போக்கி மான் கோ விளையாட்டின் வெற்றியை, தங்கள் நிறுவன விளையாட்டுகள் முறியடிக்கும் என சோனி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்த ஆறு விளையாட்டுகளில் சிலவற்றை இலவசமாக அளிக்க உள்ளதாகவும் இந்த புதிய விளையாட்டுகள் ஆப்பிள் ஐ.ஓ.எஸ் மற்றும் கூகுள் ஆன்ட்ராய்டு செல்பேசிகளில் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

தற்போது பத்து வகையான விளையாட்டு கேம்களை உருவாக்கி வருவதாகவும் அவற்றில் ஆறு கேம்கள் அடுத்த நிதியாண்டில் வெளியிட உள்ளதாகவும் சோனி தெரிவித்துள்ளது. இந்த வீடியோ கேம்கள் முதலில் ஜப்பானிலும் பின்னர் ஆசிய நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

சூப்பர் மேரியோ விளையாட்டை திறன்பேசிகளில் விளையாடும் வகையில் நிண்டேண்டோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளதை தொடர்ந்து, தனது தயாரிப்புகள் குறித்தும் சோனி நிறுவனம் அறிவித்துள்ளது. விளையாட்டு கேம்கள் துறையில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வரும் சோனி நிறுவனம், 40 மில்லியன் அளவிற்கு தனது பிளே ஸ்டேஷன் 4 சாதனத்தை விற்பனை செய்துள்ளது.

ஆனால் சமீபகாலமாக புதிய நிறுவனங்களின் வருகையால், சோனி நிறுவனத்தின் விளையாட்டு சாதனங்களின் விற்பனை மந்தமாகத் துவங்கியுள்ளது. குறிப்பாக போக்கிமான் கோ விளையாட்டின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து, சுதாரித்துக் கொண்டுள்ள சோனி நிறுவனம் மீண்டும் தனது சந்தையை பிடிக்க புதிய விளையாட்டுகளை பல அம்சங்களுடன் உருவாக்கி வருகிறது.

நன்றி:http://tech.firstpost.com/news-analysis/sony-to-release-six-smartphone-games-in-the-next-financial-year-351807.html?utm_source=top_stories

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

விளம்பரம்

“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்
கிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் வழங்குகிறது “இலவச இணையதள இடம்”

ஆம்,
“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”

மேலும் விபரங்களுக்கு
https://cloudsindia.in/
Mobile No : 9943094945

நேரடியாக பதிவு செய்ய
https://goo.gl/w5HlKV

இந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்..




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *