BREAKING NEWS:-
Search

ஆன்லைனில் வீடியோ கேம் விளையாட புதிய வசதி..!

பிரபல வீடியோ கேமான ’ஆங்கிரி பேர்ட்’ விளையாட்டை உருவாக்கிய ’ரோவியோ’ நிறுவனம், தற்போது ’ஹாட்ச் எண்டெர்டெயிண்மெண்ட்’ என்ற புதிய நிறுவனத்தை உருவாக்கியுள்ளது. இந்த நிறுவனம் மூலம் செல்பேசிகளில் விளையாடக் கூடிய ஆன்லைன் வீடியோ கேம்களை அறிமுகப்படுத்த ரோவியோ முடிவெடுத்துள்ளது.

இதுவரை செல்பேசிகளில் வீடியோ கேம்களை விளையாட வேண்டும் என்றால் குறுஞ்செயலிகள் போல அவற்றை செல்பேசியில் தரவிறக்கம் செய்ய வேண்டும். ஆனால் ரோவியோ அறிமுகப்படுத்த உள்ள வீடியோ கேம்களை தரவிறக்கம் செய்யாமல், ஆன் லைனிலே விளையாட முடியும். முதலில் இந்த ஆன்லைன் வீடியோ கேம்களை ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் செல்பேசிகளிலும், பின்னர் மற்ற இயங்குதளத்தில் இயங்கும் செல்பேசிகளிலும் அறிமுகப்படுத்த ரோவியோ முடிவெடுத்துள்ளது.

இந்த திட்டத்திற்கு யார் வேண்டுமானாலும் அறிவுரைகள் கூறலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வீடியோ கேம்களை விளையாடும் நபர்களுக்கு, ஆன்லைன் மூலமாகவே உதவிகள் கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் ஹுவாய் நிறுவனத்திடன் இணைந்து ரோவியோ செயல்பட உள்ளது.

வரும் ஆண்டு இதுபோன்ற 100 ஆன்லைன் செல்பேசி விளையாட்டுகளை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பல செல்பேசி விளையாட்டுகளை கட்டணம் செலுத்தியே தரவிறக்கம் செய்ய முடியும். ஆனால் ரோவியோவின் ஆன் லைன் விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டால், வெறும் டேட்டா கட்டணத்தில் மூலம் செல்பேசியில் கேம் விளையாட முடியும்.

ஆன்லைனில் வீடியோ கேம் விளையாட, ஆன்லைனில் இருக்கும் மற்றொரு நபரை பங்கு கொள்ள அழைக்கும் வசதி ரோவியோ நிறுவன விளையாட்டுகளில் அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. எனவே இது போன்ற தொழில்நுட்பங்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க அந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

நன்றி:http://tech.firstpost.com/gaming/hatch-a-rovio-spinoff-to-bring-free-online-streaming-games-next-year-350829.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

விளம்பரம்

“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்
கிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் வழங்குகிறது “இலவச இணையதள இடம்”

ஆம்,
“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”

மேலும் விபரங்களுக்கு
https://cloudsindia.in/
Mobile No : 9943094945

நேரடியாக பதிவு செய்ய
https://goo.gl/w5HlKV

இந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்..




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *