BREAKING NEWS:-
Search

ஆட்டிசத்தை கண்டறியும் குறுஞ்செயலி கண்டுபிடிப்பு..!

ஆட்டிசம் என்ற குறைபாடு சமீபகாலமாக அதிக அளவில் குழந்தைகளிடம் காணப்படுகிறது. இந்த குறைபாட்டுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சரியான பயிற்சிகளை அளித்தால், மற்ற குழந்தைகள் போல மாற்ற முடியும். ஆனால் எந்த குழந்தை ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிவதில் பல்வேறு பிரச்சனைகள் நிலவுகின்றன.

இந்நிலையில் குழந்தைகளின் கருவிழி அசைவைக் கொண்டு, அந்த குழந்தை ஆட்டிசத்திற்கு ஆட்பட்டுள்ளதா என்பதை தெரிவிக்கும் குறுஞ்செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த குறுஞ்செயலியை திறன்பேசி அல்லது மடிக்கணினியில் பதிவிறக்கம் செய்துவிட வேண்டும். பின்னர் இந்த குறுஞ்செயலியை திறந்து, அதில் தோன்றும் பிரத்யேக புகைப்படங்களை குழந்தைகளை பார்க்கச் செய்ய வேண்டும். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, குறுஞ்செயலியில் தோன்றும் புகைப்படங்கள் பல பாகமாக சிதறிக் கிடப்பது போல தோன்றும். ஆட்டிசம் இல்லாத குழந்தைகளுக்கு அப்படி தோன்றாது. இதன் மூலம் குழந்தைகளுக்கு இருக்கக் கூடிய ஆட்டிசம் குறைபாட்டை ஆரம்ப கட்டதிலேயே கண்டறிந்துவிடலாம்.

உலகில் 1000 குழந்தைகளில் இருவர் ஆட்டிசம் குறைபாட்டுடன் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் முன்னரே, ஆட்டிசம் குறைபாட்டை கண்டறிந்து அதற்கான பயிற்சிகளை கொடுத்தால் மட்டுமே, பின்னாட்களில் சாதாரண குழந்தை போல செயல்பட முடியும்.

இந்த குறுஞ்செயலியானது வெறும் 54 நொடிகளில் குழந்தைகளுக்கு உள்ள ஆட்டிசம் குறைபாட்டை கண்டறியக் கூடியது. இந்த குறுஞ்செயலி மூலம் 2 வயதிலிருந்து 10 வயதுக்குட்பட்ட சுமார் 32 குழந்தைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். இதில் இந்த கருவி 93.96 சதவீதம் துல்லியான முடிவுகளை அளித்துள்ளது. தற்போது அடிப்படை வடிவமைப்பு நிலையில் உள்ள இந்த குறுஞ்செயலியில் விரைவில் நரம்பியல் நிலைகளை கண்டறியும் தொழில்நுட்பமும் பொறுத்தப்பட உள்ளதாக இதனை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி:http://tech.firstpost.com/news-analysis/smartphone-app-tracks-eyes-to-detect-signs-of-autism-in-children-347109.html

விளம்பரம்

“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்
கிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் “இலவச இணையதள இடம்”

ஆம்,
“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”

மேலும் விபரங்களுக்கு
https://cloudsindia.in/
Mobile No : 9943094945

நேரடியாக பதிவு செய்ய
https://goo.gl/w5HlKV

இந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்..




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *