உலகளவில் பிரசித்தி பெற்ற ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியானது 150 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. உலகிலுள்ள அகராதிகளிலேயே 6 லட்சம் வார்த்தைகளை கொண்டுள்ள அகராதி இது மட்டும்தான். இந்த அகராதியின் ஆசிரியர் குழு ஒவ்வொரு ஆண்டும் மார்ச், சூன், செப்டம்பர், டிசம்பர் என நான்கு முறை, உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் பிரபலமான வார்த்தைகளை தன்னுடைய அகராதியில் சேர்ப்பது வழக்கம். ஆனால் அகராதியில் சேர்க்கப்படுவதற்கு முன் அந்த வார்த்தை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? எத்தனை மக்களால் பேசப்படுகிறது? என ஆராய்ந்துதான் அகராதியில் இணைக்கும்.
கடந்த ஆண்டு கூட உலகம் முழுவதும் அடிக்கடி உச்சரிக்கப்படும் வார்த்தையான ”செல்பி” ஆக்ஸ்போர்டு அகராதியில் இணைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான ஆக்ஸ்போர்டு அகராதியில் தமிழ் வார்த்தைகளான “ஹைய்யா” மற்றும் “ஐயோ” ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் அர்த்தம் கிடையாது என்றாலும்,”O MY GOD ” என ஏமாற்றத்தை குறிக்கும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக ”ஐயோ” என்ற வார்த்தையையும், ஆச்சரியத்தையும், மகிழ்சியையும் பிரதிபலிக்க ”ஹைய்யா” என்ற வார்த்தையையும் தமிழர்கள் பெரும்பான்மையாக பயன்படுத்தி வருகின்றனர்.
உலகில் கணிசமான மக்கள் தமிழ் மொழியை பேசி வருவதால், இந்த இரண்டு வார்த்தைகளையும் ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் இணைக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இனி ஆக்ஸ்போர்டு அகராதியில் ஐய்யோவுக்கும், ஹையாவுக்கும் வேறு மொழி பேசுபவர்கள் கூட பொருள் அறிய முடியும்.
நன்றி:http://indiatoday.intoday.in/story/aiyo-oxford-dictionary/1/782813.html
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral