BREAKING NEWS:-
Search

அஸ்வினுக்கு சென்னை கேப்டன் டோனி பாராட்டு

ராஞ்சி: ராஞ்சியில் நடந்த குவாலிபயர் சுற்றில் 139 ரன்களுக்கு பெங்களூருவை சுருட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் 20-வது ஓவரின் 5-வது பந்தில் அஸ்வின் அடித்த ஒரு ரன் மூலம் இலக்கை எட்டி ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு 6வது முறையாக தகுதி பெற்றது. இந்தப் போட்டி பற்றி கேப்டன் டோனி கூறியதாவது:
140 ரன்கள் என்ற குறைவான ரன் இலக்கு, அடித்து ஆடுவதா அல்லது விக்கெட்டுகளை காத்துக் கொண்டு மெல்ல துரத்துவதா என்ற தவிபபான நிலையை ஏற்படுத்தியது. இரவு நேர பனிப்பொழிவு எதிர்பார்த்த அளவுக்கு இல்லாவிட்டாலும் குறிப்பிடத்தகுந்த அளவில் இருந்தது. அஸ்வினுக்கு எனது பாராட்டுகள். அவர் மிகச்சிறப்பாக பந்து  வீசினார். அவருக்கு உறுதுணையாக வேகப்பந்து வீச்சாளர்களும் நன்கு வீசினர். பெங்களூரு அணி  இந்த ஆட்டத்தில்10 அல்லது 12 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டது. இறுதிப் போட்டியில் சூழ்நிலைக்கு ஏற்ப எங்களது விளையாட்டு பாணி இருக்கும்.
இவ்வாறு டோனி கூறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *